2021 அணைகள் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் 5200 க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. சுமார் 450 அணைகள் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. மேலும் ஆயிரக்கணக்கான நடுத்தர மற்றும் சிறிய அணைகள் உள்ளன. இந்தியாவில் அணை பாதுகாப்பு குறித்த சட்டப்படியான அமைப்பு ரீதியிலான நிறுவனங்கள் இல்லாததால், அணை பாதுகாப்பு கவலையளிக்கும் பிரச்னையாக உள்ளது. பாதுகாப்பற்ற அணைகள் ஆபத்தானவை. அணை உடைப்பினால் பேரிடர்கள் ஏற்பட்டு உயிரிழப்பும், சொத்து இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பின்னணியில், அணைகள் பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்யும் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 13.06.2018 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விவரங்கள்:
- நாட்டில் உள்ள அனைத்து குறிப்பிட்ட அணைகளிலும் அவை பாதுகாப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் உரிய கண்காணிப்பு, ஆய்வு, நடைமுறை, பராமரிப்பு ஆகியவற்றை மேற்கொள்ள இந்த மசோதா வகைசெய்கிறது.
- தேசிய அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைப்பதற்கு இந்த மசோதா வகை செய்கிறது. இந்தக் குழு அணை பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்கி, இதற்கென தேவைப்படும் வரன்முறைகளை பரிந்துரை செய்யும்.
- தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம் என்கிற கட்டுப்பாட்டு அமைப்பை ஏற்படுத்தவும் மசோதா வகை செய்கிறது. இந்த ஆணையம், கொள்கை, நாட்டின் அணைகள் பாதுகாப்பு குறித்த நெறிமுறைகள், தரங்கள் ஆகியவற்றின் அமலாக்கத்தை மேற்கொள்ளும்.
- மாநில அரசுகள், மாநில அணை பாதுகாப்புக் குழுக்களை அமைத்து செயல்படவும் மசோதா வகைசெய்கிறது.