உத்திரபிரதேசம் மாநிலத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் , தூக்கிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் உ.பி சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இருவரும் தங்களது கண்டங்களை பதிவு செய்துள்ளனர்.






 


உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த புதன்கிழமை லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின் நிகாசன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மரத்தில் , தூக்கில் தொங்கிய நிலையில் இரண்டு சகோதரிகள்  கண்டுபிடிக்கப்பட்டனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் இப்படி மர்மமான முறையில் , இறந்திருப்பது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதங்கத்தை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையில், பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். ஆனாலும்  பெற்றோரின் அனுமதில் இல்லாமல் உடற்கூறாய்வுக்கு அனுப்பியது எப்படி என கேட்டு பெற்றோர்கள் உறவினர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இந்த சம்பவம் மாநிலம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, உ.பி.யில் "பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் என்ன ?செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகும் தவறான விளம்பரங்கள் சட்டம் ஒழுங்கு நிலைமையை மேம்படுத்தாது ” என ட்வீட் தெரிவித்துள்ளார்.






சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், உ.பி., சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், இந்த சம்பவத்தை "ஹத்ராஸின் கொடூரமான சம்பவம் “ என குறிப்பிட்டிருக்கிறார் . மேலும் ”"நிகாசன் காவல் நிலையப் பகுதியில் இரண்டு தலித் சகோதரிகளைக் கடத்திச் சென்று கொலை செய்திருக்கின்றனர். பிறகு காவல்துறையினர் தந்தையின் அனுமதி இல்லாமல் பெண்களின் உடலை உடற்கூறாய்விற்கு அனுப்பியிருக்கின்றனர்.லக்கிம்பூரில் விவசாயிகளுக்குப் பிறகு, தலித்துகள் கொல்லப்படுவது இப்போது 'ஹத்ராஸ் கி பேட்டி' படுகொலையின் கொடூரமான மறுநிகழ்வு ஆகும்” என குறிப்பிட்டுள்ளார்.







சகோதரிகள் இருவரும் தீவனம் வெட்டிக் கொண்டிருந்த போது, ​​பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள், பைக்கில் வந்த இரண்டு சிறுமிகளை கடத்தி சென்று கொலை செய்துவிட்டதாக பெண்ணின் தாய் உள்ளிட்ட கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கிடையில் இந்த வழக்கில் தொடர்புடைய  நான்கு பேரை காவலில் எடுத்து விசாரணை நடந்து வருவதாக  அம்மாநில கூடுதல் எஸ்பி அருண் குமார் சிங் தெரிவித்துள்ளார்.