கர்நாடக மாநிலத்தில் பூத கோலா (Bhoota Kola) நடனம் ஆடி கொண்டிருந்த போதே கலைஞர் கந்து அஜிலா(Kanthu Ajila) உயிரிழந்துள்ளார்.


மாரடைப்பால் உயிரிழப்பு:


கர்நாடகாவின் புகழ்பெற்ற பாரம்பரிய கலை ‘பூத கோலா’. அம்மாநிலத்தின் கடற்கரையோர பகுதிகளில் அமைந்துள்ள கிராமத்தில் பூத ஆராதனா செய்வார்கள். இந்த கலைஞர்கள் தெய்வ நார்தகஸ் (Daiva Narthakas) என்று அழைக்கப்படுகின்றனர்.


தக்‌ஷினா கன்னடா மாவட்டத்தில் பூத கோல நடனத்தின்போது, கந்து அஜிலா திடீரென மயக்கமடைந்தார். அவரை பரிசோதித்து பார்த்ததில் உயிரிழந்துவிட்டார். மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பிறகு, அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அஜிலா கடபா பகுதியைச் சேர்ந்தவர். இவர் மிகவும் தேர்ந்த கலைஞர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 


பூத கோலா கலை - திரையுலகில்  பிரம்மாண்டம்


கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி கன்னடத்தில் வெளியானது ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம். கன்னட திரையுலகத்தில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்த இப்படத்தினை மற்ற மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டது 'காந்தாரா' பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி அமோகமான வரவேற்பை பெற்றது.16 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் உலகெங்கிலும் வெளியாகி 400 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.   


 



 

சர்வதேச அளவில் பாராட்டு :


ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான காந்தாரா திரைப்படம் 2022ம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமாகும். உலகத்தின் அனைத்து மூலைகளில் இருந்தும் இப்படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தன. அதற்கு முக்கிய காரணமாக இருந்த படத்தின் திரைக்கதை மற்றும் ரிஷப் ஷெட்டியின் அபாரமான நடிப்பு. காந்தாரா படத்தின் தயாரிப்பாளர் இப்படத்தினை ஆஸ்கர் 2023க்கு பரிந்துரைக்கு அனுப்பியதை உறுதி செய்துள்ளார்.


உலகெங்கிலும் பாராட்டுகளை குவித்த இப்படம் தி அகாடமி விருதுகளில் இடம்பிடிக்க முயற்சிக்கிறது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிர்கந்தூர் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் "காந்தாரா திரைப்படத்தை ஆஸ்கருக்கு அனுப்பியுள்ளோம். இறுதி பரிந்துரைகள் இன்னும் வராததால் மிகவும் ஆர்வமாக காத்து கொண்டு இருக்கிறோம். இப்படத்தின் கதை மிகவும் ஆழமானது என்பதால் உலகளவில் இப்படத்திற்கு குரல் எழுப்பப்படும் என நம்புகிறோம்" என தெரிவித்து இருந்தார் தயாரிப்பாளர் விஜய் கிர்கந்தூர்.




மேலும் வாசிக்க..


Kalakshetra Foundation : கலாஷேத்திரா ஃபவுண்டேஷன் விவகாரம்...தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டரீதியான நடவடிக்கை...முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி..!


PM Modi degree: பிரதமர் மோடி பி.ஏ. படித்தாரா இல்லையா? அபாரதம் விதித்து குஜராத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!