ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் தனகு பகுதியில்  உள்ள வேணுகோபால சுவாமி கோவிலில் ஸ்ரீராமநவமி விழா கொண்டாட்டத்தின்  தீ விபத்து ஏற்பட்டது. 

 

மேற்கு கோதாவரி மாவட்டம் தனுகு மண்டலம் துவாவில் உள்ள வேணுகோபால சுவாமி கோவிலில் ஸ்ரீராமநவமி விழா கோலாகலமாக நடந்து வந்தது. கோயிலில் பக்தர்களின் வசதிக்காக போர்வைகளைக் கொண்டு பந்தல்கள் அமைக்கப்பட்டது.  வழிபாடு நடந்து கொண்டு இருந்த போது பந்தலின் மீது பட்டாசுகள் விழுந்தன. இதனால் பந்தலில் தீப்பிடித்தது. இதனால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயினைப் பார்த்த பக்தர்கள் அங்கிருந்து அலறி அடித்து ஓடினர்.  இந்த விபத்தில் பக்தர்களுக்கு தீ காயம் ஏற்பட்டதா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.