தேசிய ஊடக நிறுவனமான டைனிக் பாஸ்கர் அலுவலகங்களில் இன்று வருமான வரி சோதனை நடைபெற்றது. வரி ஏய்ப்பு செய்ததாக அந்த செய்தி நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் டைனிக் பாஸ்கரின் டெல்லி, மும்பை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் இன்று சோதனை நடத்தினார்கள். அந்த குழும உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், வருமான வரி சோதனை குறித்து தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் ட்விட்டரில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால், #DainikBhaskar ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.