தமிழ்நாடு:



  • ராமநாதபுரம் மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணம் - பல்வேறு நிகழ்ச்சிகளின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

  • சுயஉதவி குழுக்களினால் இயக்கப்படும் தினை உணவகங்கள், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  • நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம்  - ஆகஸ்ட் 20ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும் என அறிவிப்பு

  • அதிமுக மாநாட்டிற்கு பயந்து திமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது - முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

  • அதிமுக மாநாட்டிற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு - விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையின்மை சான்று வாங்கவில்லை என புகார்

  • மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பட்டா வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் - அடிப்படை உரிமைகளை மீறிய செயல் என சென்னை உயர்நிதிமன்றம் கண்டனம்

  • அறக்கட்டளைக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துகளை தனி நபர்கள் பெயருக்கு மாற்ற முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி


 இந்தியா:



  • நாடு முழுவதும் 1000 புதிய மின்சார பேருந்துகள் அறிமுகம் - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

  • இந்தியாவின் முன்னேற்றத்தை அதிகரிப்பதில் வாஜ்பாய் முக்கிய பங்கு வகித்தார் - நினைவு நாளில் பிரதமர் மோடி பெருமிதம்

  • டிஜிட்டல் இந்தியா திட்ட விரிவாக்கத்திற்கு ரூ.14,903 கோடி - மத்திய அரசு அதிரடி 

  • தணிக்கை அதிகாரி அம்பலப்படுத்திய ஊழல்களுக்கு பிரதமர் மோடியே பொறுப்பு - காங்கிரஸ் குற்றச்சாட்டு

  • சந்திரயான் 3  விண்கலத்தில் உள்ள லேண்டர் கேமரா மூலம் புதிய புகைப்படம்  - இஸ்ரோ வெளியீடு

  • அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு  - ஜார்கண்ட் நீதிமன்றம் உத்தரவு

  • இமாச்சலபிரதேசத்தில் தொடரும் கனமழை - 3 நாட்களில் 71 பேர் பலி, மிட்பு பணி தீவிரம்

  • எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் டெல்லியில் முகாம்

  • கர்நாடகாவில் கே.ஆர். எஸ். அணையில் இருந்து  நீர் திறப்பு 13,473 கன அடியாக அதிகரிப்பு - இரு அணைகளில் இருந்தும் 18,473 கன அடி நீர் வெளியேற்றம்


உலகம்:



  • பாகிஸ்தானில் தேவாலயங்கள் மீது தாக்குதல் - 100 பேர் கைது

  • நைஜரில் நாட்டை காக்க முன்வரும் தன்னார்வலர்கள் - ராணுவ தாக்குதலை எதிர்கொல்ல திட்டம்

  • அமெரிக்காவில் காட்டுத் தீ - பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - கனடாவிலும் அவசரநிலை பிரகடனம்

  • புவி வெப்பமயமாதலை கண்காணிக்க புதிய செயற்கைகோள்களை செலுத்துகிறது நாசா

  • மியான்மரில் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 33 பேர் பலி - மேலும் 3 பேரை தேடும் பணிகள் தீவிரம்

  • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் 9 ஜாமின் மனுக்கள் நிராகரிப்பு - இஸ்லாமாபாத் நீதிமன்றங்கள் அதிரடி


விளையாட்டு:



  • பெண்கள் உலகக்கோப்பை கால்பந்தாட்டம் - இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை

  • ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்தின் தற்காலிக அணி அறிவிப்பு - ஓய்வினை திரும்ப பெற்றதால் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணியில் சேர்ப்பு

  • சென்னையில் பார்முலா 4 கார்பந்தயம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் - இந்தியாவில் முதன்முறையாக சாலையில் நடப்பதாக அமைச்சர் உதயநிதி தகவல்