டெல்லியில் 24 வயதுடைய பெண் ஒருவர் தனது லிவ் இன் பார்டரின் மகனைக் கொன்று படுக்கைப் பெட்டியில் சடலத்தை அடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


11 வயது சிறுவன் கொலை:


ரன்ஹோலா பகுதியில் வசிக்கும் பூஜா குமாரி தனது லிவ் இன் பாட்னர் ஜிதேந்திரன் தனது மனைவியை விவாகரத்து செய்ய வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் அவருக்கு 11 வயதில் மகன் இருந்ததன் காரணமாக ஜிதேந்திரன் மறுத்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த பூஜா குமாரி, ஆகஸ்ட் 10 ஆம் தேதி 11 வயது சிறுவனை கொன்று படுக்கை பெட்டியில் அடைத்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கழுத்தை நெரித்து கொலை:


 இது தொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், பூஜா சிறுவன் தூங்கிக் கொண்டிருக்கும் போது கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் பின் அந்த சிறுவனின் உடலை கட்டிலில் இருக்கும் பெட்டியில் அடைத்ததாகவும் கூறியுள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302 இன் கீழ் புது தில்லியில் இருக்கும் இந்தர்புரி காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆகஸ்ட் 10 ஆம் தேதி  இரவு 8.30 மணியளவில், மருத்துவமனையில் இருந்து சிறுவன் இறந்துவிட்டதாகவும், அவனது கழுத்தில் நெரிக்கப்பட்ட அடையாளங்கள் இருப்பதாகவும் போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். 


லிவ் இன் பார்ட்னர்:


அப்போது 11 வயது சிறுவனின் வீட்டிற்கு கடைசியாக சென்றவர் பெண் பூஜா குமாரி என்பது தெரியவந்துள்ளது. மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில்,  குற்றம் சாட்டப்பட்டவர் தூங்கும் போது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று பின்னர் அவரது உடலை படுக்கை பெட்டியின் உள்ளே மறைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். 300 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் சோதனை செய்ததன் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டார் என சிறப்பு போலீஸ் கமிஷனர் (குற்றம்) ரவீந்திர சிங் யாதவ் குறிப்பிட்டுள்ளார். காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட பூஜா 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி ஆர்ய சமாஜ் கோயிலில் ஜிதேந்தரை திருமணம் செய்துள்ளார்.


“ஜிதேந்தருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருப்பதால், மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். அதனை தொடர்ந்து ஜிதேந்தரும் பூஜாவும் வாடகை வீட்டில் ஒன்றாக வாழத் தொடங்கினர். இதற்கிடையில், மனைவியை விவாகரத்து செய்வது தொடர்பாக ஜிதேந்தர் மற்றும் பூஜா இடையே தகராறு தொடங்கியது. பின் ஜிதேந்தர் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற மறுத்துவிட்டார்” என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். 


காரணம் என்ன?


ஜிதேந்தர் வாடகை வீட்டில் இருந்து வெளியேறி தனது மனைவியுடன் வசித்து வந்தார் என போலீசார் தெரிவித்தனர். இதனால் பூஜா குமாரி கோபமடைந்தார். ஜிதேந்தர் தனது மகன் காரணமாகவே தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதாக அவர் கருதினார். வியாழனன்று, அவர் தனது நண்பரை சந்தித்து, ஜிதேந்தரின் வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி அவரிடம் கேட்டுள்ளார்.  


“அவர்கள் ஜேஜே காலனி, இந்தர்புரி (ஜிதேந்தர் வீடு) சென்றடைந்தனர், அங்கு கதவு திறந்து கிடந்தது மற்றும் பிட்டூ என்ற திவ்யான்ஷ் தூங்கிக் கொண்டிருந்தார். தக்க நேரத்தில், பூஜா அவனை கழுத்தை நெரித்து கொலை செய்தார். அதன்பிறகு, அவர் படுக்கையில் இருந்து துணிகளை எடுத்து, சிறுவனை படுக்கையில் போட்டுவிட்டு கதவை பூட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்” என்று போலீசார் தெரிவித்தனர்.