நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கோரத்தாண்டவமாடி வருகிறது. புதுவையிலும் தொற்று பாதிப்பு அதிகரித்ததால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் தொற்று பரவல் கட்டுக்கடங்காததால் கடந்த மே மாதம் முதல் அடுத்தடுத்து முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வந்தது. காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் மதியம் 12 மணிவரை திறக்க அனுமதிக்கப்பட்டது. அரசின் கடுமையான நடவடிக்கைகளால் புதுவையில் 2 ஆயிரமாக இருந்த தினசரி தொற்று பாதிப்பு 500-க்கு கீழ் சரிந்தது. உயிரிழப்பும் குறைந்தது.
ஓட்டல்கள், மது பார்கள், தங்கும் விடுதிகளில் பணிபுரியும் ஊழியர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், கட்டுமான பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளித்து புதுச்சேரி அரசு செயலர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்துவருகிறது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது. குணமடைந்தோர் சதவீதம் 94.77. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் சரியாக அணிந்து, தனிநபர் இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடித்து, கை சுத்தம் பேணி, கொரோனா தடுப்பூசியும் போட்டுக்கொண்டால் கொரோனாவில் இருந்து முற்றிலும் விடுபடலாம்" என்று குறிப்பிட்டார். கொரோனா தாக்குதல் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதால் புதுச்சேரி மக்கள் மெல்லமெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.