Crime: ராஜஸ்தான் கணவன் முன்னிலையில் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளர்.
ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் காவலாளியாக ஜேதுசிங் (47) பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இவர் கடந்த புதன்கிழமை அதாவது நவம்பர் 9-ஆம் தேதி காலையில் பணிக்கு சென்றுவிட்டு மாலை 5 மணியளவில் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இருவரும் உணவு சாப்பிட்டு விட்டு தூங்குவதற்காக அறைக்கு சென்றவுள்ளனர்.
பாலியல் வன்கொடுமை :
அப்போது, 4 பேர் கொண்ட கும்பல் வீட்டின் முன்பக்க கதவை தட்டியுள்ளனர். இதை அறிந்த ஜேதுசிங் கதவை திறந்துள்ளனர். உதவி கேட்பது போல் நடித்து அந்த 4 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்தனர். பின்பு ஜேதுசிங்கை கடுமையாக தாக்கி உள்ளனர். பின்பு, அவரிடம் இருந்த 1,400 ரூபாய் பறித்தனர். இதனை அடுத்த அந்த 4 பேர் கொண்ட கும்பல் அதிக பணம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களைக் கேட்டுள்ளனர். ஆனால் வெள்ளி நகைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை என தம்பதியர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற் பிறகு ஜேதுசிங்கை 4 பேர் கொண்ட கும்பல் கடுமையாக கட்டையால் தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களிடம் எந்த விலை உயர்ந்த பொருள் மற்றும் பணம் எதுவும் இல்லாததால் ஜேதுசிங்கின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ய திட்டமிட்டனர். பின்பு அந்த பெண்ணின் கணவனின் கை, கால்களை கயிற்றினால் கட்டிப்போட்டதாக கூறப்படுகிறது. பின்பு கணவரான ஜேதுசிங் கண்முன்னே மனைவியை 4 பேர் கொண்ட அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
3 பேர் கைது :
இதுகுறித்து, உள்ளூர் காவல்நிலையத்தில் தம்பதியினர் புகார் அளித்தனர். தம்பதியினர் அளித்த புகாரின்படி போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்நநிலையில், 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற சம்பவம் இந்தியாவில் தொடர் கதையாகி வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணக்கெடுப்பின்படி, கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை இந்திய காவல்துறை பதிவு செய்த 60 லட்சம் குற்றங்களில் 4,28,278 வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களுடன் தொடர்புடையவை என கூறப்படுகிறது.
மேலும், கடந்த ஆண்டு காவல்துறையில் 31,878 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், முந்தைய ஆண்டு வழக்குகளின் எண்ணிக்கையை விட 28,153 அதிகரிப்பை காட்டுகிறது என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Crime : முத்தலாக் கொடுத்த கணவர்.. கணவனின் சகோதரனால் பாலியல் வன்கொடுமை.. உபியில் கொடூரம்..