சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை சிறைபிடித்தது. முதல் அலை, இரண்டாம் அலை என இரண்டு அலைகள் பரவி மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்தது. உலகின் அனைத்து நாடுகளும் தங்கள் மக்களை காப்பதற்காக லாக் டவுன் போட்டன. இருப்பினும் தொற்றின் தீவிரம் குறையாமல் தொடர்ந்துவந்தது. இதனையடுத்து இந்தத் தொற்றுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தியாவைப் பொறுத்தவரை கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் இரண்டு தவணைகளாக போடப்படுகின்றன.


ஆரம்பத்தில் தடுப்பூசி மீதான ஆர்வம் மக்களிடையே பெரிதாக இல்லை. காலம் செல்ல செல்ல பெரும்பாலானோர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். இதனால் தொற்று சிறிதளவு கட்டுப்படுத்தப்பட்டது. கொரோனா சிறிது ஓய்ந்தவுடன் தற்போது உருமாறிய கொரோனா எனப்படும் ஒமிக்ரான் தொற்று பரவ ஆரம்பித்திருக்கிறது. 


இந்தத் தொற்றானது இதுவரை 72 நாடுகளில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதாரத் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.






இந்நிலையில்,  இந்தியாவின் சீரம் நிறுவனமும், அமெரிக்காவின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமும் இணைந்து ''கோவோவேக்ஸ்'' என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளன. இந்தத் தடுப்பூசி பாதுகாப்புடன் 90 சதவீத செயல்திறனை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


மேலும், இந்தத் தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பிடம் அனுமதியும் கோரப்பட்டிருந்தது. இதையடுத்து உலக சுகாதாதார மையம் அவசரகால பயன்பாட்டிற்கு கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவல்லா கூறுகையில்,  “கோவோவேக்ஸுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதியளித்துள்ளது. இது சிறந்த பாதுகாப்பு மற்றும் செயல்திறனைக் காட்டுகிறது” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: School Building Collapse: நெல்லை பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் உயிரிழப்பு!


தேசிய இளைஞர் தினக்கொண்டாட்டம் - புதுச்சேரி தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி என ஆளுநர் தமிழிசை பேச்சு


Raising Marriage Age | புதிய திருமண வயது 21: பெண்களுக்கு வரமா, சாபமா?