நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் நாடு முழுவதும் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.03 லட்சமாக இருந்தது. நேற்று நாடு முழுவதும் 96 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு நாட்டில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை புதிய உச்சமாக 1.15 லட்சத்தை கடந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 1 லட்சத்து 15 ஆயிரத்து 736 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியே 28 லட்சத்து 01,785 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 630 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 66 ஆயிரத்து 177 நபர்கள் உயிரிழந்துள்ளனர். நாட்டின் உயிரிழப்பு விகிதம் 1.30 சதவீதமாக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 92.11 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.