Watch video: கொஞ்சம் பொறுப்புடன் நடந்துக்கோங்க.. முத்த மழை பொழிந்த காதல் ஜோடி... - வைரல் வீடியோவால் எச்சரிக்கும் மெட்ரோ நிர்வாகம்!

டெல்லி மெட்ரோ ரயிலில் இளம் ஜோடி ஒன்று முத்தமிட்டு கொண்ட வீடியோ வெளியானது தொடர்பாக, சக பயணிகளின் உணர்வுகளை புண்படுத்தும் அநாகரீகமான அல்லது ஆபாச செயலில் ஈடுபடுவது தண்டனைக்குறிய குற்றம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

டெல்லி மெட்ரோ ரயிலில் இளம் ஜோடி ஒன்று முத்தமிட்டு கொண்டதாக வீடியோ வெளியானது தொடர்பாக, சக பயணிகளின் உணர்வுகளை புண்படுத்தும் அநாகரீகமான அல்லது ஆபாச செயலில் ஈடுபடுவது தண்டனைக்குறிய குற்றம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

டெல்லி மெட்ரோ ரயிலில் சமீபகாலமாக நடைபெற்று வரும் சில சம்பவங்கள் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி  உள்ளது. பொது இடம் என்ற நாகரீகம் இன்றி சில பயணிகள் அத்துமீறி பாலியல் சீண்டலில்  ஈடுபட்டது, சில பெண்கள் முகம் சுழிக்கும் வகையில் கவர்ச்சிகரமாக உடை அணிந்து சென்றது போன்ற வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் தற்போது டெல்லி மெட்ரோ ரயிலில்  இளம் ஜோடி ஒன்று  முத்த மழை பொழிவது போன்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், மெட்ரோ ரயிலுக்குள் தரையில் அமர்ந்திருக்கும் ஒரு இளைஞரின் மடியில் ஒரு இளம் பெண் படுத்திருக்கிறார். அந்த இளைஞர் அப்பெண்ணை முத்தமிட்டு கொண்டே இருக்கிறார். வைரலாக பரவும் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள் சிலர் அந்த ஜோடியை வெட்கமற்றவர்கள் என கடும் கோபத்துடன் விமர்சித்துள்ளனர்.

மேலும் இந்த ஜோடி மீது மெட்ரோ ரயில் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலர் தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகமும் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயணிகள் மெட்ரோவை பயன்படுத்தும் போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சமூகத்தில் ஏற்றுக்கொள்ள கூடிய அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். சக பயணிகளின் உணர்வுகளை புண்படுத்தும் அநாகரீகமான அல்லது ஆபாச செயலிலும் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என கூறி உள்ளது.

முன்னதாக, டெல்லி மெட்ரோவில் இளைஞர் ஒருவர் ஆபாச செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று வைரலாகி இருந்தது. இது தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பினார். 

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் மெட்ரோவில் பயணிக்கும்போது பயணிகள் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது, மேலும் பயணிகள் உடனடியாக நடைபாதை, நிலையம், நேரம் போன்ற விவரங்களைக் கொடுத்து இந்த விஷயத்தை ஹெல்ப்லைனுக்கு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. 

 

Continues below advertisement