மாற்றுத்திறனாளி ஒருவரை ஒரு ஆணும், பெண்ணும் கட்டையால் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
 இந்த வீடியோ நொய்டாவில் நடந்துள்ளது.அந்த வீடியோவின் படி மாற்றுத்திறனாளி ஒருவர் தன்னுடைய 3 சக்கர பைக்கில் அமர்ந்துள்ளார். அவரை சுற்றிவளைத்த ஒரு ஆணும், பெண்ணும் பெரிய கட்டையை கையில் வைத்துக்கொண்டு அவரை மிரட்டுகின்றனர். 






அது மட்டுமின்றி கையில் உள்ள கட்டையால் மாற்றுத்திறனாளியின் பைக்கை அடித்து நொறுக்குகின்றனர். இந்த வீடியோவே சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஷேர் செய்த பலரும் தங்களது கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர். இது காட்டுமிராண்டுத்தனம் என்றும், மனிதநேயம் எங்கே என்றும் பலரும் கேள்விகளை பதிவிட்டு வருகின்றனர்.


முதற்கட்ட விசாரணையில் தாக்கப்பட்ட நபரும், அந்த மாற்றுத்திறனாளியும் உறவினர்கள் என்றும், சொத்து தொடர்பான தகராறில் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


















மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண