கொரோனா முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசிகள் போடப்படுவதற்கு இடையிலான கால அவகாசத்தை நீட்டித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி கொரோனாவுக்கு எதிராகச் செலுத்தப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இதுவரை 6-8 வாரகால இடைவெளிவிட்டுப் போடப்பட்டன.தற்போது இதனை 12-16 வாரகால இடைவெளியாக இவை அதிகரிக்கப்பட்டுள்ளன.




 






மருத்துவர் என்.கே.அரோரா தலைமையிலான கொரோனா பணிக்குழு இதனை அரசுக்குப் பரிந்துரைத்திருந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் , மருத்துவர் வி.கே.பால் தலைமையிலான கொரோனா கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்குழுவும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளன. பிரிட்டனில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்த இடைவெளி பரிந்துரைக்கப்படவில்லை.