உச்சநீதிமன்றத்தின் 4 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா அலையின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்குகிறது. இந்தநிலையில், நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட நீதிபதி குணமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆதாரங்களின் படி, நீதிபதிகள் அனிருத்தா போஸ், எஸ் ரவீந்திர பட், ஜேபி பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் தற்போது கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் நீதிபதி சூர்யா காந்த் ஒரு வாரத்திற்கு முன்பு குணமடைந்துள்ளார்.
உச்சநிதிமன்றத்தின் ஒரே பாலின திருமணம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியலைப்பு பெஞ்சில் ஒருவராக நீதிபதி பட் கடந்த வியாழக்கிழமை வரை அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெஞ்சில் இருந்த மற்ற 4 நீதிபதிகளுக்கு தற்போது ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வருகின்ற திங்கட்கிழமை நடைபெற இருந்த வாதங்கள் நேற்று இரவே ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவசர மருத்துவ சூழ்நிலை காரணமாக நீதிபதி கவுல் உச்சநீதிமன்றத்திற்கு வரமாட்டார் என அறிவிக்கப்பட்டது.
மேலும், தலைமை நீதிபதி அலுவலகத்தில் உள்ள வழக்கு நிலுவைகளை தவிர்க்கும் நோக்கத்தில், புதிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுகளுக்கு வழக்குகளை ஒதுக்க பார் கவுன்சில் முடிவு செய்து வருகிறது.