சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான டெலியோஸ் (TeLEOS-02) செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி சி-55 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.


ஆந்திரா மாநிலம் நெல்லூர்  மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று பகல் 2.19 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி-55  ராக்கெட் மூலம் டெலியோஸ் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.


இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் திட்டம், இந்த ஆண்டின் 3-வது ராக்கெட் திட்டமாகும். கடந்த பிப்ரவரி மாதம் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் 3 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியது. இதை தொடர்ந்து மார்ச் மாதம், எல்.வி.எம். 3 மூலம் வணிக செயல்பாட்டிற்கான 36 ஒன்வெப் செயற்கைக்கோளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது


சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 741 கிலோ எடை கொண்ட TELEOS-02 செயற்கைக்கோள், 16 கிலோ எடை கொண்ட லுமிலைட்-4 என்ற 2 செயற்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டது. பி.எஸ்.எல்.வி.சி-55 ராக்கெட்டுக்கான 25 மணி நேரம் 30 நிமிட கவுண்ட்டவுன் நேற்று பகல் 12.49 மணிக்கு தொடங்கியது. டெலியோஸ் செயற்கைக்கோள் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இதில் பொறுத்தப்பட்டிருக்கும் ரேடார் மூலம் 1 மீட்டர் தெளிவுத்திறனில் தரவை வழங்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.  ஹாட்ஸ்பாட் கண்காணிப்பு மற்றும் மூடுபனி மேலாண், விமான விபத்து தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் பலவற்றிருக்கு உதவுகிறது. இது மற்றொரு வணிகப் பயன்பாட்டு திட்டமாகும். 


ஏற்கனவே கடந்த ஜூன் மாதத்தில் 155 கிலோ எடையுள்ள சிங்கப்பூரின் நன்யாங் என்ற செயற்கைக்கோளை சுமந்து விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.


வணிகச் சந்தையில் இந்தியாவின் பங்கை அதிகரிக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  அந்த வகையில் பல்வேறு நாட்டை சேர்ந்த செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. பிஎஸ்எல்ல்வி சி 55 தற்போதைய வணிக சந்தையில் 2 சதவீதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்  நேற்று முன்தினம் இரவு திருப்பதிக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு சென்றது. நேற்று காலை திருப்பதி கோயிலுக்கு சென்று வழிபட்டனர். அந்த குழுவில் இஸ்ரோவின் சந்தோஷ், யசோதா, சீனிவாச குப்தா, வனஜா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.