கொரோனா பெருந்தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலகை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தொற்று எதிரான பெரிய ஆயுதமாக தடுப்பூசி விளங்கி வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களுடைய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு பயன்படுத்த அவசர கால அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு முன்பாக இந்த தடுப்பூசி 12-14 வயது வரையிலான சிறுவர்களுக்கு மட்டும் செலுத்தப்பட்டு வந்தது. கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை பயோலாஜிகல் ஈ நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் தடுப்பூசிக்கான விலையை 840 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக கடந்த மாதம் குறைத்தது. இந்த விலை தனியார் தடுப்பூசி மையங்களில் வசூலிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் மாதம் இந்த தடுப்பூசி இந்தியாவில் முதல் முறையாக 12 முதல் 14 வயதுக்குட்பட்டோருக்கு செலுத்தப்பட்டது. தற்போது வரை இந்தியாவில் 51.7 மில்லியன் டோஸ் கோர்பேவாக்ஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 17.4 மில்லியன் பேருக்கு இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது. 100 மில்லியன் கோர்பேவாக்ஸ் தடுப்பூசிகள் தற்போது வரை இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பயோலாஜிக்கல் ஈ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்பின்னர் தற்போது பூஸ்டர் டோஸாக தற்போது 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் விளம்பரம்! இணையத்தில் தர்ம அடிவாங்கும் பாடி ஸ்பிரே நிறுவனம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்