Congress president election: காங்கிரஸ் கட்சி தனது காலக்கட்டத்தின் மிக முக்கியமான கட்டத்தை இப்போது எட்டியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் தோல்வி, எப்படி திரும்பினாலும் சறுக்கல் என நொடித்துப்போயிருக்கும் கட்சியை மீண்டும் தூக்கித் நிறுத்த ‘தேசமே ஒன்றிணைவோம்’ யாத்திரையை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தொடங்கியிருக்கிறார் அந்த கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி.


அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த கட்சி, இப்போது அதற்கான தேர்தலை அறிவித்திருக்கிறது. ராகுல்காந்திதான் மீண்டும் தலைவராக வேண்டும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தொடங்கி பல மாநில கமிட்டிகளும் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், நான் தலைவர் பதவிக்கு போட்டியிடமாட்டேன் என தான் செல்லும் பாதை யாத்திரை பாதையிலேயே ஒத்த காலில் நின்றுக்கொண்டிருக்கிறார் ராகுல்காந்தி.


அவரை சமாதானப்படுத்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தினாலும், ’நான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டா’ கான்செப்டில் விடாப்பிடியாக இருக்கிறார் ராகுல். எனவே தலைவர் தேர்தலில் அவர் போட்டியிடுவதில்லை என்று கிட்டத்தட்ட முடிவாகிவிட்டபின், தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்யவிருக்கிறார் ராஜஸ்தான் மாநில முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கேலட். 


ராகுல்காந்தி போட்டியிட்டால், அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவேண்டாம் என்று முடிவு எடுத்திருந்த தலைவர்கள், இப்போது அசோக் கெலட்டிற்கு போட்டியாக களமிறங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் அசோக் கேலட்டை எதிர்த்து களமிறங்குவார் என கூறப்படும் நிலையில், அப்படி அவருக்கு எதிராக சசி தரூர் போட்டியிட்டால் 22 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.


ஒருவேளை ஓட்டெடுப்பு நடைபெற்றால் காங்கிரஸ் கட்சியில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வரும் அக்டோர் மதம் 17 ஆம் தேதி வாக்களித்து, அதற்கான முடிவுகள் 19ஆம் தேதி வெளியிடப்படும்.


அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமாம தமிழ்நாட்டை சேர்ந்த ப.சிதம்பரமும் காங்கிரஸ் தலைவருக்கு போட்டியிடுவார் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இது குறித்து அவரது மகனும் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பியுமான கார்த்தி சிதம்பரத்திடம் கேட்டபோது, அவர் அப்படி எந்த திட்டமும் இல்லை என்று கூறினார்.


இருந்தாலும், ராஜாஸ்தான் என்ற ஒரு மாநிலத்தை ஆட்சி செய்த அசோக் கெலாட்டை காட்டிலும் இந்தியாவின் உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் என்ற முக்கிய பதவிகளை வகித்து, காங்கிரஸ் கட்சியின் பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் வகித்து, கட்சிக்கு வழிகாட்டியாக திகழ்ந்துள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில் ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தலைவரானால் காமராஜருக்கு பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆன 2வது தமிழர் என்ற பெருமையும் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும். ஆனால், அதற்கான முடிவை சோனியாகாந்தி எடுப்பாரா என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.உதயநிதி முதல் நட்டா வரை... வாயை விட்டு வாங்கி கட்டும் பாஜக...! கன்டென்ட் மெட்டீரியலாக மாறிய மதுரை எய்மஸ்