காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பயணத்தை மேற்கொண்டுள்ளார். இவர் தன்னுடைய பயணத்தை தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த 7ஆம் தேதி தொடங்கினார். முதல் மூன்று நாட்கள் அவர் கன்னியாகுமரியின் பல்வேறு பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து உரையாடினார். அதைத் தொடர்ந்து அவர் திருவனந்தபுரம் சென்று கேரளாவில் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார். 


இந்நிலையில் இன்று அவர் கேரளாவில் ஒரு காட்சி படகு போட்டியில் பங்கேற்றுள்ளார். இது தொடர்பான வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அதன்படி இன்று கேரளாவின் புன்னமடா ஏரியில் காட்சி பாம்பு படகு போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கேரள காங்கிரஸ் தலைவர்கள் சிலர் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் ராகுல் காந்தியும் தன் பங்குகிற்கு படகை இயக்கி மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. 


 






இன்று கேரளாவின் ஆலப்புளாவில் ராகுல் காந்தி தன்னுடைய பாத யாத்திரையை தொடர்ந்து வருகிறார்.


தினமும் 25 கிலோ மீட்டர்.. 150நாட்கள்:


மொத்தமாக 150 நாட்கள் நடைபெற உள்ள இந்த பாத யாத்திரையில் ராகுல் காந்தி சுமார் 1 கோடி மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். கன்னியகுமரி மாவட்டத்தில் அவர் சுமார் 1 லட்சம் மக்களை சந்தித்ததாக கூறப்படுகிறது.  ராகுல் காந்தி தினமும் 25 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார். தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் அவர் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.


 






 ராகுல் காந்தி கடந்த 11ஆம் தேதியிலிருந்து ராகுல் காந்தி கேரளா மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அங்கு 18 நாட்கள் தங்கி பாதயாத்திரை செல்கிறார். அதன்பின்னர் கர்நாடகா மாநிலம் சென்று 21 நாட்கள் பாத யாத்திரையை தொடர்கிறார். இதைத் தொடர்ந்து ஆந்திரா, வட மாநிலங்களுக்கு இவர் யாத்திரை பயணத்தை தொடர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக காஷ்மீரில் தன்னுடைய பாத யாத்திரையை ராகுல் காந்தி முடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க: கன்னித்தன்மையை நிரூபிக்கும் கட்டாயத்தில் ராஜஸ்தான் பெண்! மாப்பிள்ளை வீட்டார் அட்டூழியம் - நடந்தது என்ன?