காங்கிரஸ் கட்சியில் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இணைவார் என்ற தகவல் பரவி வந்தது. அதைத் தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசனை மட்டும் தந்ததாகவும் அவர் கட்சியில் இணைய மறுத்திவிட்டதாகவும் தகவல் வெளியானது. இதை பிரசாந்த் கிஷோர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் ஒரு தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் காங்கிரஸ் கட்சி தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதன்படி, “காங்கிரஸ் கட்சியின் எதிர்கால திட்டத்தம் தொடர்பாக பல விஷயங்களை நான் அவர்களுடன் ஆலோசனை செய்தேன். அவை அனைத்தையும் அவர்களே செய்து கொள்ள முடியும். காங்கிரஸ் கட்சியில் பல தலைவர்கள் உள்ளனர். அவர்களை அதை செய்ய முடியும். நான் அதற்கு தேவையில்லை. அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் கட்சியில் சேர மறுத்துவிட்டேன்.
அவர்களுக்கு என்ன ஆலோசனை வழங்க வேண்டும் என்று நினைத்தேனோ அவை அனைத்தையும் கூறிவிட்டேன். 2014ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக காங்கிரஸ் கட்சி தன்னுடைய எதிர்காலம் தொடர்பாக சிந்தித்துள்ளது. நான் வகுத்து கொடுத்த திட்டத்தில் ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி ஆகியோரை முன்னிலை படுத்தவில்லை. அந்த திட்டம் தொடர்பாக பொதுவெளியில் தெரிவிக்க முடியாது.
மேலும் காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி எந்த பதவியில் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க நான் யார்? அவருடைய இமேஜை பாஜக கடுமையாக தாக்கியிருந்தாலும் அதை சரி செய்துவிடலாம். 2002ஆம் ஆண்டு இருந்த பிரதமர் மோடியின் மீது விமர்சனங்கள் தற்போது எப்படி மாறியுள்ளது. ஆகவே அதேபோன்று ராகுல் காந்தி மீது வரும் விமர்சனங்களும் மாறும் வாய்ப்பு உள்ளது.
2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பில்லை என்று கூற முடியாது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சி ஒரு மிகப்பெரிய கட்சி. அந்தக் கட்சியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டால் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு இருக்கும். மாநில தேர்தல்களில் முடிவுகள் தேசிய தேர்தலில் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்