ஜம்மு-காஷ்மீரில் இந்தாண்டில் இதுவரை 62 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறைத் தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். அதில் 47 பேர் இந்திய பயங்கரவாதிகள் என்றும், 15 பேர் வெளிநாட்டு பயங்கரவாதிகள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் அதிகரித்து வரும் பயங்கரவாதச் செயலைக் கண்டிக்கும் வகையில் இந்தாண்டு துவக்கம் முதலே எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.






மேலும், சோதனையின்போது நடத்தப்பட்ட என்கவுன்டர்களில் இதுவரை 62 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் இதில் 32 பேரில் பயங்கரவாதிகள் கடந்த 3 மாதத்தில் சுடபட்டவர்கள் என காஷ்மீர் காவல்துறைத் தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். சுடப்பட்ட 62 பேரில் 39 பேர் லஷ்கர்-இ-தைபாவை சேர்ந்தவர்கள் என்றும், 15 பேர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பையும் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து காஷ்மீர் மண்டல போலீஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளது. அந்த டீவீட்டில், "இந்த ஆண்டு இதுவரை நடந்த என்கவுன்டர்களில் கொல்லப்பட்ட மொத்த பயங்கரவாதிகள்= 62


பயங்கரவாத அமைப்பு வாரியாக:


LeT = 39


JeM=15


HM =06


அல்-பத்ர் =02


கொல்லப்பட்ட 62 பயங்கரவாதிகளில் 47 உள்ளூர் பயங்கரவாதிகள் மற்றும் 15 வெளிநாட்டு பயங்கரவாதிகள். - காஷ்மீர் ஐஜிபி @JmuKmrPolice" என்று கூறப்பட்டுள்ளது.






முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் இரவு நடந்த என்கவுன்டரில் இரண்டு அல்-பத்ர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது. காஷ்மீர் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் ஆஃப் போலீஸ் (ஐஜிபி), விஜய் குமார் கூறுகையில், ஐஜாஸ் ஹபீஸ் மற்றும் ஷாஹித் அயூப் என அடையாளம் காணப்பட்ட இரண்டு பயங்கரவாதிகள் இந்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் புல்வாமாவில் வெளி தொழிலாளர்கள் மீது தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து இரண்டு ஏகே 47 ரக துப்பாக்கிகளையும் போலீசார் கைப்பற்றினர். தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகமான ஷோபியன், பரமுல்லா மாவட்டங்களில் அடிக்கடி பாதுக்காப்புப் படையினர் சோதனை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.