LPG Rate: மாதத்தின் முதல் நாள்: தாறுமாறாக எகிறிய வர்த்தக சிலிண்டர் விலை...!

வர்த்தக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது.

Continues below advertisement

சமையில் எரிவாயு விலை ஒவ்வொரு மாதமும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று மார்ச் மாதத்திற்கான புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி வீட்டில் பயன்படுத்தப்பட்டு வரும் சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே விலையில் நீடிக்கிறது.

Continues below advertisement

இருப்பினும் தொழில்முறைக்காக பயன்படுத்தப்படும் 19 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 105 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 2,012 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த எரிவாயுவின் விலை 91.50 ரூபாய் வரை குறைக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் தற்போது அந்த விலை ஏற்றப்பட்டுள்ளது. 

அதேபோல் 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலையும் 27 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. தற்போது அந்த சமையில் எரிவாயு 569 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola