• எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் திறக்கப்பட்டன, அதுவும் சதிச் செயலா.? என இபிஎஸ்-க்கு அமைச்சர் சேகர் பாபு கேள்வி.
  • பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த செயற்குழு செல்லாது என தேர்தல் ஆணையத்தை நாடுகிறது அன்புமணி தரப்பு.
  • தமிழகத்தில் நடைபெறும் கோவில் குடமுழுக்கு விழாக்கள் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், அவ்விழாக்களில் முதலமைச்சர் கலந்துகொள்ளாதது ஏன் என கேள்வி.
  • தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் காவல் நிலையங்களில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைமையகத்தில் சந்தித்து நிதி உதவி வழங்க விஜய் திட்டம் என தகவல்.
  • கடலூர் செம்மங்குப்பத்தில், ரயில் விபத்து நடந்த இடத்தில், தெற்கு ரயில்வே உண்மை கண்டறியும் குழுவினர் ஆய்வு. அருகில் உள்ள வீடுகளிலும் விசாரணை.
  • தமிழ்நாட்டில், முதுகலை ஆசிரியல், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கனிணி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பிரிவுகளில் 1,996 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம்.
  • போதைப் பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், புழல் சிறையிலிருந்து அவர்கள் விடுவிப்பு.
  • தமிழ்நாட்டில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்பு. மறிலில் ஈடுபட்ட 14,000 பேர் கைது.
  • மதுரை-தூத்துக்குடி 4 வழிச்சாலையில், கண்டெய்னர் லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஓட்டுநர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு.
  • திருப்பூரில் சிலிண்டர்கள் வெடித்த விபத்தில் 33 வீடுகள் தரைமட்டம். மாற்றுத் துணி கூட இல்லை என பாதிக்கப்பட்ட மக்கள் ஆதங்கம்.