பனிமூட்டம் காரணமாக டெல்லி, ஹரியானா, சண்டிகர், பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய இடங்களுக்கு வானிலை மையம் இன்று ரெட் அலர்ட் விடுத்துள்ளது.


2022 ஆம் ஆண்டு நிறைவடைந்தவுடன், வட கிழக்கு பருவமழைக்கான மழை காலமும் முடிவடைந்தது. இதையடுத்து, இந்தியாவில் குளிர் காலமும் துவங்கி விட்டது.


குளிர்காலம்:


பூமியில் இந்தியாவின் இருப்பிடமானது வட அரைக்கோளத்தில் உள்ளது. பூமியின் சுற்றுப்பாதையை பொறுத்து, சூரிய ஒளியானது செங்குத்தாக, பூமியின் மீது விழுவது வட அரைக்கோளத்தில் இருந்து தென் அரைக்கோளத்தில் பயணமாகும். ஜனவரி மாத காலங்களில் சூரிய ஒளியானது செங்குத்தாக தென் அரைக்கோளத்தில் விழுகிறது.


தென் அரைக்கோளத்தில் செங்குத்தாக சூரிய ஒளி விழுவதால், பூமியின் வட அரைக்கோளத்தில் வெப்பம் குறைவாக இருக்கும். இதனால் வட அரைக்கோளத்தில் குளிர்காலம் நிலவுகிறது. 


இந்நிலையில், இந்தியாவின் வடக்கு பகுதிகளில் குளிர்காலம் அதிகமாக நிலவி வருகிறது. இதையடுத்து, குளிர் காலத்தை எச்சரிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளுக்கு, இந்திய வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.


ரெட் அலர்ட்: 


பனிமூட்டம் காரணமாக டெல்லி, ஹரியானா, சண்டிகர், பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய இடங்களுக்கு வானிலை மையம் இன்று ரெட் அலர்ட் விடுத்துள்ளது.


ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டிலும், அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.






இயல்பு வாழ்க்கை பாதிப்பு:


பனிமூட்டம் காரணமாக, வாகன பயணிகள் காலை மற்றும் இரவு நேரங்களில் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். சில நேரங்களில் பனிமூட்டம் காரணமாக விமானங்களும் தரையிறங்காமல் திருப்பி விடப்படும் நிகழ்வுகளும் ஏற்படுகின்றன.   


கடந்த சில தினங்களுக்கு முன்பு, உத்தர பிரதேசம் கான்பூரில் கடும் குளிரால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட்டு 25 பேர் உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், கடும் குளிர் காரணமாக இந்தியாவின் வட பகுதியில் உள்ள சில இடங்களில் குளிரை எச்சரித்து முன்னெச்சரிக்கையாக இருக்கும் வகையில் ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


Also Read: Sabarimala: பம்பை நதியில் ‘பாக்டீரியா’.. தொற்று நோய் பரவும் அபாயம்.. ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சி...