Vande Bharat Train: வந்தே பாரத் ரயில் உணவில் கரப்பான் பூச்சி: ரயில்வே தெரிவித்தது என்ன?

Cockroach Found In Vande Bharat Train Food: வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Continues below advertisement

Vande Bharat Train Food Issue: வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவத்திற்கு, ரயில்வே நிர்வாகம் பதிலளித்துள்ளது. 

Continues below advertisement

வந்தே பாரத் ரயில்:

இந்தியாவில் மிகவும் சொகுசு வாய்ந்த ரயிலாக வந்தே பாரத் ரயில் உள்ளது. இந்த ரயிலானது, மிகவும் வேகமாக இலக்கை அடையும் ரயிலாகவும் பார்க்கப்படுகிறது. இதனால், இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு, இதர ரயிலை விட கட்டணமானது, அதிகமாகவே உள்ளது.

உணவில் கரப்பான் பூச்சி:

இந்நிலையில், வந்தே பாரத் விரைவு ரயிலில் ஒரு ஜோடி பயணம் செய்தது. அவர்களது, பயணத்தில் வழங்கப்பட்ட உணவானது, அவர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் போபாலில் இருந்து ஆக்ராவுக்கு வந்தே பாரத் ரயிலில் பயணித்துள்ளனர். இதற்கு இடையேயான  550 கி.மீ பயண தூரத்தை கடக்க ஏறக்குறைய ஏழு மணி நேரம் ஆகும். பயணத்தின்போது, அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அவர்களின் உணவில் ஒரு கரப்பான் பூச்சி இருந்தது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புகார்:

இச்சம்பவம் தொடர்பாக விதித் வர்ஷ்னி என்ற நபர், ரயிலில் பராமரிக்கப்படும் மோசமான சுகாதார சேவைகள் குறித்து புகார் தெரிவித்து,  X தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார். அதில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவ், இந்திய ரயில்வேயின் கேட்டரிங் மற்றும் டிக்கெட் விற்பனையாளரான ஐஆர்சிடிசியை டேக் செய்து, உணவின் படத்தையும் பதிவிட்டார்.

பதிவில், உணவு விற்பனையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் இது யாருக்கும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தார்.  

ரயில்வே நிர்வாகம் பதில்:

இதையடுத்து, IRCTC பதிலளித்துள்ளதாவது "உங்களுக்கு ஏற்பட்ட பயண அனுபவத்திற்காக நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். இந்த விவகாரம் தீவிரமாகப் பார்க்கப்பட்டு, சம்பந்தப்பட்ட சேவை வழங்குநருக்கு தகுந்த அபராதம் விதிக்கப்படும். உற்பத்தி மற்றும் தளவாட கண்காணிப்பையும் தீவிரப்படுத்துகிறோம்” எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola