திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான முக ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளை திமுக தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் இனிப்பு வழங்கி கோலாகலமாக கொண்டாடி வருகிறது.  முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாள் என்பதால் நேற்று முதலே, இவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. 


இந்தநிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்தநாளையொட்டி, அகில இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு, தனது பிறந்தநாள் வாழ்த்துகளை  தெரிவித்தார்.


தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார், இங்கிலாந்தில் உள்ள ஏம்ஸ்பரி டவுன் கவுன்சிலின் துணை மேயர் டாக்டர் மோனிகா தேவேந்திரன் ஆகியோர் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.