Kerala Highcourt : நோயாளிகளை தொடாமல் மருத்துவர்கள் எப்படி சிகிச்சை அளிக்க முடியும் என கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 


முன்ஜாமீன் கோரி மனு


கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை தொட்டு சிகிச்சை அளித்ததாக மருத்துவர் ஒருவரை தாக்கினார். இதனால் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அவர் முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நேற்று கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.பதருதீன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.பதருதீன் விசாரணை செய்தார்.


நீதிமன்றம் கேள்வி


இந்த மனு நேற்று கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.பதருதீன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.பதருதீன் கூறுகையில், "மருத்துவர்கள் நோயாளிகளின் உடலை தொடாமல் பரிசோதிக்கவோ, சிசிச்சை அளிக்கவோ எப்படி முடியும்? இடது நெஞ்சகப் பகுதியல் ஸ்டெத்தஸ்கோப்பை வைத்தால் தான் இதயதுடிப்பை அறிய முடியும் என்று கேரள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.


அதே நேரத்தில், மருத்துவர்கள் தங்கள் வரம்புகளை மீறி நோயாளிகளிடம் தவறாக நடந்துகொண்டால் அது தவறுதான். குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மைகளை ஆராய்ந்து அதற்கேற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.பதருதீன் கூறினார்.


அரசு தரப்பு வாதத்தின்படி, ஜனவரி 8ஆம் தேதி மாலை 6 மணியளவில் உடல்நிலைக் குறைவு காரணமாக குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி கேரளாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு மருத்துவர் ஒருவர் பரிசோதனை செய்தார். அப்போது, குற்றம்சாட்டப்பட்டவரின் மனைவியை தவறாக தொட்டதாக கூறி மருத்துவரின் சட்டை காலரைப் பிடித்து கன்னத்தில் அறைந்துள்ளார். 


முன்ஜாமீன் மறுப்பு


சிகிச்சை அளித்த மருத்துவர் தவறாக தொட்டதாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதாக வாதிடப்பட்டது. இதனை அடுத்து, குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவியின் கையில் காயமடைந்தாகவும் அவரின் சகோதரர் முன்னிலையில்தான் அவருக்கு மருத்துவர் சிகிச்சை அளித்ததாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மருத்துவர் மீது தவறான வழக்கை மனுதாரர் பதிவு செய்தாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  எனவே குற்றம் சாட்டப்பட்டவரின் முன்ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 




மேலும் படிக்க


புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பாஜக எம்எல்ஏ வாக்குவாதம்...


Watch Video: “நீண்ட ஆயுள், ஓங்கு புகழோடு வாழ வேண்டும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இளையராஜா பிறந்தநாள் வாழ்த்து..!