ஜம்மு - காஷ்மீர் அருகே பூஞ்ச் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 5 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.


ஜம்மு - காஷ்மீரில் உள்ள பூஞ்ச் எல்லைப்பகுதியில் (Line of Control (LoC) எதிர்பாராவிதமான ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் ஐந்து வீரர்கள் உயிரிழந்துவிட்டதாகவும் ஐந்து வீரர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 






Nilam தலைமை அலுவலகத்தில் இருந்து Balnoi Ghora Post சென்று கொண்டிருந்த  11 மராத்தா லைட் காலாட் படையின் ராணுவ வாகனம், சாலையை விட்டு விலகியபோது விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ வாகனம் சுமார் 150 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஓட்டுநர் உட்பட 10 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ வாகனத்தில் 16 வீரர்கள் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இராணுவம் ஈடுப்பட்டுள்ளது.