இந்திய எல்லைக்கு உட்பட்ட அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 15 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளதாக எழுந்த புகார் குறித்த மத்திய அரசின் எதிர்வினையைக் கிண்டல் செய்துள்ளார் மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி.
அண்மையில் சீன அரசு, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பல்வேறு இடங்களின் பெயர்களை மாற்றியுள்ளதாகத் தகவல் வெளியானது. இது குறித்து மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில், இது குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அருணாச்சலப் பிரதேசம் இன்றும், என்றும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அங்குள்ள பகுதிகளுக்கு சீனா புதிதாக பெயர்களை வைத்துவிடுவதால் மட்டும் இந்த உண்மை மாறிவிடாது. சீனா இப்படி அத்துமீறுவது
இது முதன்முறையல்ல. இதற்கு முன்னால் 2017லும் இதுபோன்ற சம்பவங்களில் சீனா ஈடுபட்டுள்ளது என்று விளக்கமளித்துள்ளார்.
இந்த விளக்கத்தைச் சுட்டிக் காட்டியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, கையாலாகதவர்கள் கூறும் பதில் எனக் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில் சீன அரசு ஊடகமான சினுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சீன அரசு எல்லைப் பாதுகாப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படியே அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள உள்ள 15 இடங்களின் பெயர்களை சீன திருத்தியுள்ளது. இது சீன வரைபடத்தில் இணைப்பதற்காக இவ்வாறாக திருத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
அருணாசலப் பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதி எனக் கூறும் சீனா, லடாக் பகுதியிலும் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. சீனாவுக்கு பதிலடியாக இந்தியாவும் எல்லையில் ராணுவ பலத்தை அதிகரித்துள்ளது.
இருநாடுகளுக்கும் இடையே எல்லையில் நீடிக்கும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர இதுவரை பலகட்டப் பேச்சுவார்த்தை ராணுவ மட்டத்தில் நடத்தப்பட்டது. எனினும், உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. எ
ல்லையில் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில் எல்லைப் பகுதிகளுக்கான புதிய சட்டத்தை சீனா நிறைவேற்றியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் தேசிய சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் வரும் ஜனவரி 2022 முதல் அமலுக்கு வரும் என்று அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய சட்டத்தில், எல்லைப் பகுதிகளை பாதுகாப்பதற்காக சீன அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும். எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். எல்லைப் பகுதிகளில் சமூக மேம்பாடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வழங்கிட இந்த சட்டம் வழி செய்யும்அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சினைகளில் சுமூக தீர்வு காண இந்த சட்டம் வழி செய்யும் என்பன போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இதன் அடிப்படையில் தான் சீனா, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 15 இடங்களின் பெயர்களை மாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.