மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டப்மிட்டிருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்ததையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீர்விபடுத்தப்பட்டுள்ளன.   

  


 






 


புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, காலிஸ்தான் இயக்கத்தினர் மும்பையின் பல்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், மும்பையில் உள்ள பிராதான ரயில் நிலையம், மருத்துவமனை, மெட்ரோ, சினிமா உள்ளிட்ட பொது இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.  பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, காவல் துறையினரின் விடுப்பையும், வார விடுமுறையையும் அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது. 


 






 


முன்னதாக, ஒமிக்ரான் தொற்று பரவாமல் தடுக்க, குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் 144-ன் கீழ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அம்மாநில அரசு தடை விதித்திருந்தது. சினிமா அரங்குகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், பார்கள் போன்ற பொது இடங்களில் மக்கள் அதிகம் கூட முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.      


நாசவேலை சம்பவங்களைத் தடுக்க, ரயில்வே காவல்துறையும் பாதுகாப்பை முடிக்கிவிட்டுள்ளது. மும்பை ரயில்வே காவல்துறை ஆணையர்  குவைசர் காலித் தனது ட்விட்டர் பதிவில், " கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க மாநில அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு  உத்தரவுகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். மாநிலத்தின் பிராதான ரயில் நிலையங்களில் சந்தேகத்திற்குரிய நபர்களை கண்காணிக்கவும், சோதனையிடவும், நாச வேலைகளை தடுக்கவும் பாதுகாப்பு படைகளை குவித்துள்ளோம். காவல்துறை நிச்சயமாக தனது கடமையை செய்யும். உங்களிடம் ஒத்துழைப்பு மட்டுமே கோருகிறோம்" என்று ஆணையர் குவைசர் காலித் தெரிவித்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண