நிதி சார் கூட்டாச்சி முறையை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக நிதியமைச்சர பழனிவேல் தியாகராஜன் மத்திய நிதியமைச்சரிடம் தெரிவித்தார்.  நேற்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 2022-23 மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக மாநிலங்களின் நிதி அமைச்சர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 


இந்த கூட்டத்தில் கலந்து பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர், பட்ஜெட் உரையில்,  நிதி சார் கூட்டாச்சி முறையை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு  ஆலோசனைகளை வழங்கினார். 


 


கடந்த காலத்தில் மத்திய அரசின் பல பொதுத்துறை நிறுவனங்கள் இயங்க தமிழகஅரசு இலவசமாக நிலங்களை வழங்கியது. இப்போது அவை தனியார்மயமாகிவிட்டதால் சந்தை மதிப்பில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.  


மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மத்திய வரிகளின் பங்கு அதிகரிக்கப்படவேண்டும். 


மத்திய அரசின் உதவி பெறும் திட்டங்களில் மாநிலங்களின் பங்களிப்பு கணிசமான அளவு உயர்த்தப்படுள்ளது. இதன் காரணமாக, மத்திய வரிகளின் ஒட்துமொத்த வரிப் பகிர்வுத் தொகுப்பில் இருந்து, மாநிலங்களுக்கான பங்கீடு 42% ஆக அதிகரிக்கப்பட்டாலும், மாநிலத்திற்கான மொத்தமான நிதி அளிப்பு அதிகரிக்கப்படவில்லை.          


மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளாத,மத்திய அரசால் விதிக்கப்படும் மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்கள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வருவாய் பங்கீட்டில் மாநில அரசுகள் இழப்பை சந்தித்து வருகின்றன. இதனை சரி செய்வது  இன்றியமையாததாகும். 


தமிழ்நாடு அரசுக்கு, தர வேண்டியுள்ள  17,000 கோடி நிலுவை மானியங்கள் மற்றும் நிலுவைத் தொகையினை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.


வெளிச்சந்தையில் மாநிலங்கள் கூடுதலாக கடன் வாங்குவதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அகற்ற வேண்டும். 2020-21-ஆம் ஆண்டுக்கான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் இருந்து 2 சதவீதம் அளவுக்கு கூடுதல் கடன் வாங்குவதற்கு முன்னதாக மத்திய அரசு அனுமதித்திருந்தது.  ஆனால், அதே சமயம் கூடுதல் கடனில் ஒரு பகுதி  ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை,வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல் உள்ளாட்சி அமைப்புகள், மின்சாரத் துறை ஆகியவற்றில் சீர்திருத்தங்களை  மேற்கொள்ள வேண்டும்.  இந்த நிபந்தனைகளால் மாநிலங்களை வெளிச் சந்தைகளில் கடன் வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது


உள்ளிட்ட 23 கோரிக்கைகளை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.   


மத்திய நிதி இணை அமைச்சர், முதல்வர்கள், துணை முதல்வர்கள், மாநில நிதி அமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


மேலும், வாசிக்க: 


India China border tension: அருணாச்சலை சொந்தம் கொண்டாடும் சீனா: 15 பகுதிகளுக்கு பெயர் சூட்டியது!          



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண