Children's Day 2022: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. நேரு குழந்தைகள் மீது பெரிதும் அன்பு கொண்டவர். அவருக்கு குழந்தைகள் என்றால் அவ்வளவு பிரியம். குழந்தைகள் மீது தீரா பற்று கொண்டிருந்தவர் நேரு. குழந்தைகளின் நலன், அவர்களுக்குக்கான கல்வி உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட இதோ வாழ்த்துச் செய்தி உங்களுக்காக..
வாழ்த்துங்க:
- அன்பு செல்லங்களே! நட்சத்திரமாய் வானில் மின்னி ஒளி வீசுங்கள்! இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
- கண்மணிகளே! நீங்கள் எங்கள் வாழ்வை அழகாய் மாற்றுகிறீர்கள். உன் முகத்தில் சிரிப்பை காண என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
- மின்மின்களே! கனவு காணுங்கள்! எந்நாளும் உங்களுக்கானது; சிறகு விரித்து பறந்து மகிழுங்கள்! இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
- குழந்தை மனம் தெய்வீகமானது; குழந்தைகளும்தான் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
- மகிழ்ச்சியை பரப்பும் பட்டாம்பூச்சிகளே, இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
- உங்கள் மனதில் இருக்கும் குழந்தை தன்மையை என்றும் விட்டுவிடாதீர்கள்; இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
- நிகழ் காலத்தை கொண்டாடும் அதியங்களே! இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
- ரத்திரனங்களே; அமுத கானங்களே! இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
- உன் திறமையை நீ கண்டெடுக்க நான் உறுதுணையாக இருப்பேன். இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
- நீ நீயாக வளர்வதை ரசிப்பதே இந்த வாழ்க்கை. இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
- வாழ்வின் எல்லா நிலையிலும் உடன் வருவோம் தங்கமே; இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
- இந்த நாள் சிறப்பானதாய் அமையட்டும்; இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
- தங்கமே; இயல்பில் இரு; இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
- நிபந்தனையற்ற அன்பை பொழியும் மேகமே,இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
- உன் கனவுகள் விரியட்டும்; இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
- நீ எவ்வளவு வளர்ந்தாலும், எனக்கு எப்போது சிறு குழந்தைதான் கண்ணே, இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
- உன் பிஞ்சு கைப்பிடித்து நடந்திட எந்நாளும் ஆசை; இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
- மழலையர்களே! உங்களை என்றும் கொண்டாடி மகிழவே ஆசை, இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
- உங்களின் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்
- எல்லா குழந்தைகளுமே சிறப்பானவர்கள்; இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
இன்றைய குழந்தைகளே வருங்கால இந்தியா- ஜவஹர்லால் நேரு
இன்று நாம் செய்யும் தியாகம், நம் குழந்தைகளுக்கு நாளை என்ற ஒன்று கிடைக்கும்- ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
குழந்தைகளிடமிருந்து பெரியவர்கள் கற்க வேண்டிய மூன்று; காரணமின்றி மகிழ்ந்திருப்பது- எதிலாவது ஈடுப்பட்டிருப்பது- தனக்கு வேண்டியவைகளை எப்படி பெறுவது- பாவ்லோ கொய்லோ
வளர்ந்த குழந்தைகளுக்கு..
உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்கள் அல்ல என்று தொடங்கும் கலீல் ஜிப்ரான் கவிதையை நம் அனைவரும் நினைவில் நிறுத்த வேண்டும். குழந்தைகள் மிகவும் இயல்பானவர்கள். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் அளிக்கும் மிகச் சிறந்த பரிசு உங்களின் நேரம். அவர்களுடன் நீங்கள் இருக்கும் நேரமே ஆகச் சிறந்த பரிசு. இயற்கையை அப்படியே ஏற்றுக்கொள்ள மட்டுமே முடியும். எதையும் மாற்ற நினைத்தால் அது இயற்கைக்கு எதிரானது. இதை நன்கு உணர்ந்த நாமும் குழந்தைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள இந்த இனிய நாளில் பெற்றோர்கள் உறுதி ஏற்பது சிறப்பானது. குழந்தை வளர்ப்பு ஒரு கலை. உரையாடல்கள், புரிதல் உள்ளிட்டவற்றின் மூலமே அது சாத்தியப்படும்.
உங்களுக்கு குழந்தை வளர்ப்பு பற்றிய ஏராளமான கேள்விகள் இருக்கிறதா? இதோ எழுத்தாளர் ஜெயராணியின் ‘ உங்கள் குழந்தை யாருடையது?’ இருக்கிறது. நல்ல வழிகாட்டி.
சுட்டிகளுக்கு இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்!