கடந்த 10 ஆம் தேதி, நாகையைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட்ள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


மீனவர்கள் கைது:


நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள், கடந்த 6 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையில் உள்ள திரிகோணமலை கடற்படை தளத்திற்கு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்து வைத்துள்ளது. மேலும் அங்கு மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.


குடும்பத்தினர் கோரிக்கை:


மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குடும்பத்தினர் தெரிவிக்கையில், குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனடியாக மீட்டு கொண்டு வர, மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


முதலமைச்சர் கடிதம்:


இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 


 








 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண