Corbevax Booster Dose: 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்றுமுதல் கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி; முன்பதிவு செய்வது எப்படி?

நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டோர் இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளலாம். 

Continues below advertisement

நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டோர் இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளலாம். 

Continues below advertisement

தற்போதுவரை கோவிஷீல்டு, கோவாக்சின், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு  ஹைதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனம், அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்திக்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசி தற்போது 5 முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வந்தது. 

பூஸ்டர் தடுப்பூசி

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க இருக்கும் வழிமுறைகளில் முதன்மையானதாக கருதப்படுவது தடுப்பூசி. இதுவரை நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 207 கோடி 26 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில், பூஸ்டர் தடுப்பூசி வழிமுறை குறித்து மத்திய அரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு இவை இரண்டில் ஒன்றை இரண்டு தவணைகளில் செலுத்திக் கொண்டவர்கள், அதையே பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

அப்படியிருக்க, கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு இரண்டில் எதை முதல் மற்றும் இரண்டு தவணைகளில் செலுத்தி இருப்பின், 6 மாதங்கள் ஆனவர்கள், இனி கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தியடைந்த நபர்களுக்கு கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.


இதுதொடர்பாக பயாலஜிக்கல்- இ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் பூஸ்டர் தடுப்பூசியாக கோர்பேவாக்ஸ் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்ட நாட்டின் முதல் தடுப்பூசி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.

கோர்பேவாக்ஸ் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்வது எப்படி?

அரசு மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களில் தகுதியான, 18 வயதுக்கு மேற்பட்டோர் இன்று (ஆகஸ்ட் 12ஆம் தேதி) முதல் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ளலாம்.

https://www.cowin.gov.in/  இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அவர்களின் அட்டவணைக்கு ஏற்ப கோபோர்வேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

*

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola