தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு  அறிவுரை வழங்குமாறு குடியுரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் மரபுகளை மீறாமல் தமிழ்நாடு மக்களுக்கு பணியாற்ற அறிவுறுத்துமாறு குடியரசு தலைவருக்கு முதலமைசச்ர் வலியுறுத்தியுள்ளார்.


சட்டப்பேரவை விவகாரம்;


இந்த ஆண்டின் முதல் சட்டபேரவை கூட்ட தொடரில், ஆளுநர் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் உரையில், அரசு தயாரித்த கோப்புகளை முழுமையாக படிக்காமல், சில பகுதிகளை தவிர்த்து படித்தார். இதற்கு திமுக அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரம் மேலும் வெடிக்க தொடங்கியது.


இந்நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின், குடியரசு தலைவர் திரௌபதி முர்முக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


அதில் தெரிவித்துள்ளதாவது,


இந்தச் சூழ்நிலையில், குடியரசுத் தலைவர் மக்களாட்சித் தத்துவத்தை உயர்த்திப் பிடிக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பினை காக்கவும் வேண்டுமென்று முதலமைச்சர் கேட்டுகொண்டுள்ளார். மேலும் தமிழ்நாடு ஆளுநர் முக்கியான அரசு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் அவைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் முட்டுக்கட்டைபோட்டு வருவதையும், சட்டமன்றத்தில் விவாதித்து 'மக்களால்" நிறைவேற்றப்பட்ட மசோதக்களை தேவையற்ற சிறு காரணங்களை காட்டி சட்டத்தை நிறைவேற்றாமல் தடுப்பது அரசின் செயல்பாட்டு வேகத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல் நீதி மன்றத்தின் பணிகளையும் தன் கையில் எடுத்துக்கொண்டது போலாகின்றது.


வரவேற்று உபசரிக்கும் பண்பு:


தமிழ்நாடு என்பது எல்லா மாநிலத்தவரையும் எல்லா நாட்டினைரையும் அன்போடு வரவேற்று உபசரிக்கும் பண்புக்குப் பெயர் பெற்றது. இங்கு பல்வேறு மத மொழி மற்றும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையோடு பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இந்தக் கொள்கைகளுக்கு எதிரான தன்னுடைய கருத்துக்களைப் பொதுவெளியில் பேசி மாநிலத்தில் அமைதியின்மை ஏற்படக்கூடிய ஒரு சூழலை மாண்புமிகு ஆளுநர் ஏற்படுத்தி வருகிறார்.


குடியரசு தலைவருக்கு கோரிக்கை:


எனவே, குடியரசுத் தலைவர் இதில் தலையிட்டு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகளின்படி நடப்பதை உறுதிசெய்யவும், அதன் மூலம் மக்களுக்கு மாநில அரசு சிறந்ததொரு நிர்வாகத்தை வழங்க வழிவகை செய்யவும், மக்களாட்சித் தத்துவம் செம்மையடையவும் அவருக்கு அறிவுரை வழங்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார் மேலும். இரண்டாவதாக, ஆளுநர் என்பவர் அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியான சார்புநிலையை பொதுவெளியில் எடுத்துக்கொண்டு, பல்லாண்டுகாலமாக பின்பற்றப்பட்டு  வரும் நமது மரபுகளை மீறாமல்  தமிழ்நாடு மற்றும் அதன் மக்களுக்கேற்ற வகையில் பணியாற்றுமாறு அறிவுறுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளார்.






முதலமைச்சர் நம்பிக்கை:


இறுதியாக மாண்புமிகு குடியரசுத் தலைவருக்கு எழுதப்படும் இந்தக் கடிதமானது மாநிலத்தில் ஒரு இணக்கமான, சுமூகமான உறவு: மக்களாட்சியின் மூக்கியமான அமைப்புகளிடையே நிலவ வேண்டுமென்பதற்காவும், அவர்கள் தங்கள் கடமையினை சரிவர செய்யவேண்டும் என்பதற்காகவும் தான் எழுதப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். மாண்புமிகு குடியரசுத் தலைவரின் முயற்சி இதில் நல்லதொரு பலனைத் தருமென தாம் உறுதியாக நம்புவதாகவும் முதலமைச்சர் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.