இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவிருந்த நிலையில் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


தேர்தல் முடிவுகள் ஜூன் 4ல் வெளியாகும் நிலையில், இந்தியா கூட்டணி ஜூன் 1ல் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என கூறப்படுகிறது.