இந்தியா- இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில்,  பெகாசஸ் போன்று அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மென்பொருள் இந்தியா வாங்கலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் ப. சிதம்பரம் பிரதமர் மோடியை தாக்கி பேசியுள்ளார். 






முன்னதாக, இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 30வது ஆண்டு நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். இதுகுறித்து, அவர் தனது ட்விட்டரில், " இரு நாடுகளுக்கும் இடையே ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. ஆனால், வரலாற்று ரீதியிலான பிணைப்புகள் மிகவும் பழமையானது. சமீபத்திய ஆண்டுகளில் இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க வளர்ச்சி குறித்து திருப்தி கொள்கிறேன்" என்று தெரிவித்தார். 


முன்னதாக, இஸ்ரேல் நிறுவனத்திடம் இருந்து பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி சில நபர்களின் தொலைபேசிகள் வேவு பார்க்கப்படுவதாக செய்திகள் வெளியாகின.


இந்நிலையில், ப,சிதம்பரம் தனது ட்விட்டரில், " இந்தியா-இஸ்ரேல் உறவில் புதிய இலக்குகளை உருவாக்க  முன்னெப்போதையும் விட சிறந்த நேரம் இது தான் என்று பிரதமர் பேசியுள்ளார். நிச்சயமாக, பெகாசஸ் போன்று அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மென்பொருள் உள்ளதாக என்று இஸ்ரேலிடம்  கேட்கும் நேரம் இதுவாகத் தான் இருக்கும்.  கடைசியாக,  2 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த முறை நாம் சிறப்பாக செயல்பட முடியும். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இன்னும் அதிநவீன மென்பொருளைப் பெற்றால், அவர்களுக்கு 4 பில்லியன் டாலர்களைக் கொடுக்க முடியும்" என்று தெரிவித்தார்.  




The Pegasus Spyware Project என்று கூட்டமைப்புக்கு 50,000 தொலைபேசி எண்களுடன் கூடிய தரவுதளத்துக்கான அணுகல் கிடைத்தது.  இந்த தொலைப்பேசி எண்களுடன் தொடர்புடைய பல நபர்கள், இஸ்ரேல் நிறுவனம் தயாரித்த பெகசஸ் என்ற பென்பொருள் மூலம் உளவு பார்க்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தது. இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் என்று 300க்கும் மேற்பட்டோர்களின் எண்களும் அதில் இடம்பெற்றிருந்தன. இதில், பலபேரின் தொலைப்பேசி பெகாசஸ்ஸால் பாதிக்கப்பட்டுள்ளது அல்லது ஹேக் செய்வதற்கான முயற்சி செய்யப்பட்டது என்றும் ஊடகத்தில் செய்தி வெளியானது.


இந்நிலையில், இருதினங்களுக்கு முன்பு, பெகாசஸ் மென்பொருளை  இந்தியா விலை கொடுத்து இந்திய வாங்கியதாக பிரபல ஆங்கில நாளிதழான தி நியூ யார்க் டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது. அச்செய்தியில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2017ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் மோடி. 



பிரதமர் மோடியும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் அந்த நாட்டு கடற்கரையில் நடந்து கொண்டே பேச்சுவார்த்தை நடத்தினர். மோடியின் வருகை சுமூகமாகவே நடந்தது. அந்த பயணத்தின்போது ஏவுகணை அமைப்பு, பெகாசஸ் உளவு மென்பொருள் ஆகியவை அடங்கிய 2 பில்லியன் மதிப்பிலான வர்த்தகத்திற்கு இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துகொண்டன என்றும் கூறப்பட்டது.