மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் 64 வயது தொழிலதிபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக குற்றம் சாட்டிய பெண், தனது கைகளில் கோழி இரத்தத்தை பூசிக்கொண்டு, அந்த நபர் தன்னைத் தாக்க முயன்றபோது தான் காயமடைந்ததாகக்  பொய் புகார் கூறியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


மோனிகா பகவான் என்கிற தேவ் சவுத்ரி என்ற பெண் தனது மூன்று கூட்டாளிகளின் உதவியுடன், தொழிலதிபரிடம் ஆசை வார்த்தை கூறி அவரை ஏமாற்றி 3 கோடி  ரூபாய்  பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில்  குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த வாரம் மோனிகா சவுத்ரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.


பணத்தை இழந்த கோலாப்பூரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், நவம்பர் 2021 ஆம் ஆண்டு இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தார். நான்கு பேர் கொண்ட கும்பல் தன்னை மிரட்டி ரூ.3.25 கோடியை பறித்துச் சென்றதாகவும், அவர்கள் தன்னை மீண்டும் வீடியோ மூலம் மிரட்டி மேலும் ரூ.2 கோடி கேட்டதாகவும் கூறப்படுகிறது. மோனிகாவுக்கு உடந்தையாக இருந்து, அவரது மூன்று கூட்டாளிகள் ஆகாஷ் என்ற அனில் சவுத்ரி, ஆடை வடிவமைப்பாளரான லுப்னா வசீர் என்ற சப்னா மற்றும் நகை வியாபாரி மணீஷ் சோடி ஆகியோர் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகத் கூறப்பட்டுள்ளது.


2017ஆம் ஆண்டில் இருந்தே அனில் மற்றும் சப்னா இருவரும் தொழிலதிபருடன் நட்பில் இருந்து, அவரது சொத்துக்களை அபகரிக்க சதித்திட்டம் தீட்டியதும், தெரியவந்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு, மும்பையில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தபோது, தொழிலதிபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக மோனிகா குற்றம் சாட்டினார். மோனிகாவின் கூட்டாளியான சப்னா, அப்போது இருவருக்கும் நடந்த சண்டையை வீடியோவை எடுத்திருக்கிறார். இந்த வழக்கில் மோனிகா ஜூன் மாதம் 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.


மேலும் படிக்க 


Brij Bhushan: பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சிங்குக்கு இடைக்கால ஜாமீன்..டெல்லி நீதிமன்றம் உத்தரவு


INDIA Alliance: எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு சூப்பர் பெயர்...பிரதமர் மோடியை எதிர்க்க புதிய தலைவர்..அதிர வைக்கும் தகவல்கள்