நாட்டின் ஐந்தாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இதுவாகும்.


பெங்களூரு கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சென்னை - மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெங்களூரு நகர் வழியாக செல்கிறது.


இந்த ரயில் 479 கிமீ தூரத்தை 6 மணி 40 நிமிடங்களில் கடக்கிறது. இந்த ரயில், தென் மாநிலங்களுக்கு இடையேயான இணைப்புக்கும் வணிக நடவடிக்கைகளுக்கும் ஊக்கத்தை அளிக்கும்.


பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களுக்கு ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டபோது, பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்ட முதல் மாநிலம் கர்நாடகம் ஆகும்.


அந்த வகையில், கர்நாடகாவிலிருந்து காசிக்கு யாத்ரீகர்களை அனுப்ப கர்நாடக அரசும் ரயில்வே அமைச்சகமும் இணைந்தது. காசி, அயோத்தி, பிரயாக்ராஜ் ஆகிய இடங்களுக்கு சென்று தங்க, இத்திட்டத்தின் மூலம் பயணிக்கும் யாத்ரீகர்களுக்கு வசதி ஏற்படுத்தி தரப்படுகிறது. 


தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: எந்த வழியில் செல்கிறது?


இந்த விரைவு ரயில் சென்னை சென்ட்ரல், பெங்களூரு நகரம் மற்றும் மைசூரு சந்திப்பு ஆகிய வழித்தடத்தை உள்ளடக்கி உள்ளது. பெரம்பூர், வேப்பம்பட்டு, காட்பாடி சந்திப்பு, கூடுப்பள்ளி, மாலூர் வழியாக இந்த ரயில் செல்கிறது.


தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: எங்கெல்லாம் நிறுத்தப்படும்?


இது சென்னை சென்ட்ரலுக்கும் மைசூருவுக்கும் இடையே ஒரே ஒரு நிறுத்தத்தைக் கொண்டுள்ளது. அது பெங்களூரு நகர சந்திப்பு ஆகும்.


தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: நேர விவரம்..!


சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் நேரம்: காலை 05:50 மணி


வேலூர் காட்பாடி சந்திப்பு: காலை 07:21 மணிக்கு சென்றடைகிறது


வேலூர் காட்பாடியில் இருந்து புறப்படும் நேரம்: காலை 07:25 


பெங்களூரு நகரத்திற்கு சென்றடையும் நேரம்: காலை 10:25


பெங்களூரு நகர சந்திப்பில் நிறுத்த நேரம்: 5 நிமிடங்கள்


மைசூர் சந்திப்புக்கு வருகை: மதியம் 12:30 மணி


திரும்பும் பயண வழிகள்:


மைசூர் சந்திப்பில் இருந்து புறப்பாடு: மதியம் 1:05 மணி


பெங்களூரு நகர ரயில் நிலையத்திற்கு வருகை: மதியம் 2:55


வேலூர் காட்பாடி சந்திப்பு: மாலை 4:50 மணி


ரயில் சென்னை சென்ட்ரலில் முடிவடைகிறது: இரவு 7:35.


ரயிலின் அட்டவணை:


இந்த விரைவு ரயில் வாரத்தில் ஆறு நாட்கள் (புதன் கிழமை தவிர) இயக்கப்படுகிறது.


ரயில் எண்: 


சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூரு வரை இயக்கப்படும் ரயில் எண்: 20608


மைசூரு சந்திப்பில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் எண்: 20607


விலை பட்டியல்: 


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இருந்து மைசூரு வரை புறப்படும் ரயில் எண் 20607க்கான கட்டணம் விவரம்:


Chair Car வகுப்பு (சிசி): ரூ.1200 


எக்சிகியூட்டிவ் வகுப்பு (இசி): ரூ.2295 


மைசூருவிலிருந்து எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை செல்லும் ரயிலின் கட்டண விவரம்


Chair Car வகுப்பு (சிசி): ரூ. 1365


எக்சிகியூட்டிவ் வகுப்பு (இசி): ரூ. 2485 


மேற்கண்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் எந்த சலுகையும் வழங்கப்படுவதில்லை.