வாகன விற்பனையில் எப்போதும் சில சுவாரஸ்யமான விஷயங்கள் வருவது உண்டு. அந்தவகையில் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அசாம் மாநிலத்தில் இரு சக்கர வாகனம் வாங்க சென்ற நபர் ஒருவர் செய்துள்ள சம்பவம் பெரும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இருசக்கரம் வாங்க கடைக்கு வந்துள்ளார். அவர் அசாம் மாநிலத்தின் பார்பேட்டா மாவட்டத்தில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவர் ஆறு மாதங்களாக வாகனம் வாங்க வேண்டும் என்று சேர்த்து வைத்துள்ளார். அந்தப் பணம் மொத்தத்தையும் அவர் சில்லறையாக சேர்த்து வைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அந்தக் கடைக்கு 6 சாக்குப் பைகளில் அந்த சில்லறையை கொடுத்துள்ளார். அந்தச் சில்லறையை வாங்கி கடைக்காரர்கள் எண்ணி பார்த்து கடைசியில் வாகனத்தை அவரிடம் அளித்துள்ளனர். அவர் சுசுகியின் புதிய ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் சில்லறையுடன் வந்து அந்த ஸ்கூட்டரின் மொத்த தொகையையும் செலுத்தியது அந்த ஷோ ரூம் ஊழியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அதை எண்ணுவதற்கு அவர்களுக்கு சில மணி நேரம் எடுத்துள்ளது. அதன்பின்னர் அவர்கள் அந்த நபருக்கு இந்த வண்டியை கொடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு பலரின் கவனத்தை பெற்றுள்ளது. முன்னதாக மஹிந்திரா கார் ஷோ ரூமில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஓருவர் வாகனம் வாங்க சென்ற போது அவரிடம் காசு இருக்காது என்று கூறி ஷோ ரூம் ஊழியர்கள் அவரை துறத்திவிட்டனர். அதைத் தொடர்ந்து அந்த நபர் 10 லட்சம் ரூபாய் எடுத்து வந்து சில மணிநேரங்களில் காரை வாங்கியுள்ளார். இந்தச் சம்பவம் வைரலான பிறகு இது தொடர்பாக விசாரிக்கப்படும் என்று ஆனந்த் மஹிந்திரா தெரிவித்திருந்தார். அதைப்போன்று இந்த ஷோ ரூம் ஊழியர்கள் நடந்து கொள்ளாமல் வாகனம் வாங்க வந்த நபருக்கு முறையாக மரியாதை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: ’தலைமுடி ஸ்டைல்... குளியல்... நீச்சல்’ - சாமியார் மெயிலில் இருந்து கைப்பற்றப்பட்டதாக வெளியான திடுக் தகவல்கள்