சந்திரயான் 3-ன் ரோவர், விக்ரம் லேண்டர் எடுத்த புதிய புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. 


நிலவின் தென் துருவத்தில் வலம் வரும் ரோவர், இன்று (30/08/2023) காலை லேண்டரை எடுத்த புகைப்பட வெளியிடப்பட்டுள்ளது. அதிநவீன கேமரா எடுத்த புகைப்படத்தை முதன்முறையாக இஸ்ரோ வெளியிட்டுள்ளது. பிரன்யான் ரோவர் விக்ரம் லேண்டரை எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ டிவிட்டரில் பதிவிட்டுள்ளது. 




இஸ்ரோவின் கனவுத்திட்டம் சாதனை


சந்திரயான் -3 விண்கலம் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கியது. விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் பிரிந்து 8 மீட்டர் தூரம் பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளது.  சாய்வு தளம் மூலமாக ரோவர் தரையிறக்கப்பட்டது. 6 சக்கரம் கொண்ட 26 கிலோ எடையுடைய ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராககள் மூலமாக ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளன. 


ரோவர் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளபட உள்ளது. இது நிலவின் மேற்பரப்பில் 100 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை செல்லும் வகையில் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நொடிக்கு  ஒரு சென்டி மீட்டர் தொலைவு செல்லும்.  நிலவின் வேதியியல் கூறுகள், நுண்ணுயிர்கள் உருவாகுமா? போன்றவற்றை ஆய்வு செய்ய Alpha Particle X Ray Spectrometer (APXS) இருக்கிறது.  நிலவின் பாறை, மணல் ஆகியவற்றை ஆய்வு செய்ய  Laser Induced Breakdown Spectroscope (LIBS) என்ற தொழில்நுட்பம் ரோவரில் பொருத்தப்பட்டுள்ளது.


ரோவர் அங்குள்ள ஆற்றலை பயன்படுத்தி அதற்கேற்றவாறு ஆய்வு பணிகளை செய்ய உள்ளது. அதொடு, சூரிய ஆற்றலை பயன்படுத்தி இயங்கும் ரோவர் நிலவின் பகலில் பயணிக்குமாறு திட்டமிட்டப்படி அனுப்பப்பட்டுள்ளது.


நிலாவில் ஒரு நாள் என்பது  பூமியில் 28 நாள்களை குறிக்கிறது.  நிலவில் தொடர்ந்து 14 நாட்கள் பகலும், அடுத்த 14 நாட்கள் இரவாக இருக்கும். இதனால் அங்கு ஒரு நாள் என்பது பூமியின் 28 நாட்களுக்கு சமமாக பார்க்கப்படுகிறது. இதனால், நிலாவில் பகல் தொடங்கும் காலத்தில் லேண்டர் அங்கு தரையிறக்கம் செய்யப்பட்டது. இந்த 14 நாட்கள் சூரிய வெப்பத்தை பயன்படுத்தி ரோவர் ஆய்வுகளை மேற்கொள்கிறது. அங்குள்ள பகல் பொழுதுகளை பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ளும் வகையில் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  14 நாட்கள் இரவு நேரம் வரும்போது, லேண்டர் கருவிக்கு சூரிய ஒளிக் கிடைக்காது.  இரவு நீடிக்கும் 14 நாட்களில் நிலவும் உறைபனிக் குளிர் காரணமாக, கருவிகளின் பாகங்களில் விரிசல்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் லேண்டர், ரோவர் செயல்படாமல்போக வாய்ப்புள்ளதால் இந்த திட்டம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.


ரோவர் மேற்கொள்ளும்  ஆய்வுகள் இந்தியாவின் எதிர்கால நிலவு மற்றும் விண்வெளி திட்டங்களில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும். பிரக்யான் ரோவர் நிலவு குறித்து அனுப்பபும் தகவல்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள்.  அந்த தரவுகள் லேண்டர் மூலம் பூமிக்கு அனுப்பப்படுகிறது. மின்காந்த அலைகளால் அனுப்பப்படும் தரவுகள், ஒருவேளை லேண்டர் மூலம் பூமிக்கு அனுப்பப்படும் முயற்சி தோல்வியடைந்தால் சந்திரயான்- 2-இன் ஆர்பிட்டர் உள்ளே நுழைந்து அதன் தரவுகளை பூமிக்கு அனுப்பும். சந்திரயான் -2 இன் ஆர்பிட்டர் சந்திரயான் 3-உடன் தொடர்பில் இருக்கும். ரோவர் ஆய்வு செய்யும் தரவுகள் லேண்டருக்கும் அனுப்பும் அதே நேரத்தில் சந்திரயான் 2வின் ஆர்பிட்டருக்கும் அனுப்பப்படும்.


நிலாவில் உள்ள காலநிலை தரவுகளை பகுப்பாய்வு செய்து அனுப்பும். அதுமட்டுமின்றி, கனிம வளங்கள், நிலவின் அமைப்பு, தோற்றம் மற்றும் நிலவின் வளிமண்டலம் என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆராயப்பட உள்ளது. ரோவர் மண்ணை குடைந்து, அதிலிருந்து மாதிரிகளை எடுத்து லேசர் மூலம் ஆராய்ந்து பார்க்கும். சந்திரயான் 3 கண்டறியும் ஆய்வுகள் மூலம் இனி விண்வெளி பயணத்திற்கு தேவையான பொருட்களை பூமியில் இருந்தே கொண்டு செல்ல வேண்டிய நிலை இருக்காது. அதற்கான தளத்தை நிலவிலும் அமைக்கலாம் என்று கூறப்படுகிறது. அத்துடன் நிலவில் இருக்கும் இயற்கை கனிமங்கள், தனிமங்களை பூமியில் வாழும் மனிதர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புண்டு என்றும் கூறப்படுகிறது