Rajnikanth: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷிடம்  நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் பேசியுள்ளார்.


ரஜினிகாந்த் ஆறுதல்:


ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.  ரூ.371 கோடி ஊழல் புரிந்ததாக சந்திரபாபு நாயுடு  கடந்த  9 ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்ந நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.


அப்போது,  நாரா லோகேஷிடம் தொலைபேசி வாயிலாக பேசிய ரஜினிகாந்த், ”எனது நண்பர் சந்திரபாபு நாயுடு, மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடும் சிறந்த போராளி. இந்த பொய் வழக்குகளும், சட்டவிரோத கைதுகளும் அவரை ஒன்றும் செய்யாது. எனது அருமை நண்பரான  சந்திரபாபு நாயுடு தவறு செய்ய மாட்டார். அவரது நற்செயல்களும், தன்னலம் அற்ற பொது சேவையும் அவரை பத்திரமாக வெளியே கொண்டு வரும். எனவே நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும்" என்று பேசியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 


ஆந்திராவை உலுக்கிய கைது:


ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) கைது செய்து செய்யப்பட்டுள்ளார். இவருடைய ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு துறையின் ஊழல் நடைபெற்று இருப்பதாக கூறி கடந்த 8ஆம் தேதி காலை 6 மணியளவில் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த கைதை அடுத்து, ஆந்திரா மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது. அவரது ஆதரவாளர்களின் போராட்டத்தால் ஆங்காங்கே போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டன.


சந்திரபாபு சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக குடியரசு தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு தெலுகு தேசம் கட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதனிடிடையே,1988 ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சந்திரபாபு  நாயுடு மீது ஏசிபி 120(பி), 166, 167, 418, 420, 465, 468, 201, 109, 34 மற்றும் 37 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


இதனிடையே, விஜயவாடாவில் உள்ள சிஐடி அலுவலகத்திற்கு சந்திரபாபு நாயுடு அழைத்துச் செல்லப்பட்டு விடிய விடிய விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து,  அதற்கு மறுநாள் சந்திரபாபு நாயுடு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு தொடர்பாக சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரும்படி மாநில குற்ற புலனாய்வு துறை தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.  அதேநேரம், சந்திரபாபு நாயுடுவை ஜாமீனில் கொண்டு வர அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதன்பின், அவரது ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவரை செப்டம்பர் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது. இதனால் அவர் ராஜமகேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டது முதல் ஆந்திராவில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது. தெலுங்கு தேசம் கட்சியினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் அவ்வப்போது ஈடுபட்டு வருவதால் போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 




மேலும் படிக்க 


Cauvery Water: ”தமிழ்நாட்டுக்கு தண்ணீர் இல்லை"...கர்நாடக தடாலடி...அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு!