Puducherry Hospital: புதுச்சேரியில் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதால், புதுச்சேரியில் செவிலியர்கள் 4 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 


கோரிக்கை:


புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்கத்தில் காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று செவிலியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுமட்டுமின்றி, புதிய செவிலியர்கள் பணியிடங்களை உருவாக்கவும், 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி உயர்த்தப்பட்ட நர்சிங் அலவன்ஸ் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில், புதுச்சேரி அரசு செவிலியர்கள் நான்கு நாட்களுக்கு மேல் விடுப்பு எடுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது.


புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைகளில் செவிலியர் பற்றாக்குறை நிலவுவதால்  நான்கு நாட்களுக்கு மேல் யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது என்று மருத்துவ  கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு செவிலியர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


4 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுக்க தடை:
 
அரசு பொது மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதன்காரணமாக  அறிவிக்கப்படாத விடுமுறை மற்றும் 4 நாட்களுக்கு மேல் விடுப்பி எடுக்க கூடாது, அதே போல் மருத்துவ விடுப்பு எடுத்தால் பணியில் சேர்ந்தவுடன், அதற்கான மருத்துவ போர்டு முன் ஆஜராகி தங்கள் உடல் திறனை நிரூபிக்க வேண்டும் என மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேல் உத்தரவிட்டுள்ளார்,  இதற்கு செவிலியர்கள் பல ஆண்டுகளாக செவிலியர் பற்றாக்குறை இருக்கிறது.


இதனை  நிவர்த்தி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாறாக செவிலியர்களை பணிக்கு வர வேண்டும் என அழுத்தம் கொடுப்பது எந்த வகையில் நியாயம் எனவும் செவிலியர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். நான்கு நாட்களுக்கு மேல் விடுப்பு எடுக்கக் கூடாது மருத்துவ விடுப்புக்கு உடற் திறனை  நிரூபிக்க வேண்டுமென கிடுக்குப் படி உத்தரவு செவிலியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க 


Nipah Virus: கேரளாவில் பரவும் நிபா வைரஸ்.. கோவை மாவட்ட எல்லையில் கண்காணிப்பு தீவிரம்..!


MKStalin: சனாதன போர்வையை போர்த்தி பதுங்க பார்க்கிறது பாஜக; தந்திரத்தை முறியடிப்போம்: திமுகவினருக்கு முதல்வர் அறிவுறுத்தல்!