சண்டிகர் பல்கலைக்கழக மாணவி ஒருவர் விடுதியில் தனது வகுப்புத் தோழர்களின் ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை எடுத்தது குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மொஹாலி கல்வி நிறுவனத்தை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தனியுரிமை மீறப்படவில்லை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்திய போதும் அது குறித்த சர்ச்சை தொடர்ந்து எழுந்து வருகிறது.


குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, முழு வழக்கும் தேசிய ஊடகங்களால் கவனிக்கப்பட்டது. இருப்பினும், மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்கள் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை மங்கலாக்கி, குற்றம் சாட்டப்பட்ட ஆணின் புகைப்படத்தைக் காட்டியது தற்போது பொதுமக்களால் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. 














சண்டிகர் பல்கலைக்கழக எம்எம்எஸ் வீடியோ வழக்கில் தொடர்புடைய ஆணின் முகத்தைக் காட்டியதற்காக ஆஜ் தக் செய்தி நிறுவனத்தை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். ஆனால் உண்மையில் வீடியோக்களை படம்பிடித்து பரப்பிய பெண்ணின் முகத்தைக் காட்டவில்லை. சிலர் இந்தியா டுடே குழுவிடம் இதுகுறித்துக் கேள்வி எழுப்பினர். குற்றம் சாட்டப்பட்ட ஆணின் படம் காட்டப்பட்டுள்ளது ஆனால் பெண் முகம் மறைக்கப்பட்டது ஏன்? என அவர்கள் கேட்டுள்ளனர்.


சட்டம் என்ன சொல்கிறது?


சந்தேகத்துக்குரிய நபரை அடையாளம் காண்பது மிக முக்கியமான சாட்சியமாக கருதப்படுகிறது. போலீசாரால் கைது செய்யப்பட்ட சந்தேகத்துக்குரிய நபர்கள், குற்றவாளிகளாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம் என்றால், அவர்களை ஊடகங்கள் புகைப்படம் எடுத்து செய்தித்தாள்களில் வெளியிடவோ அல்லது தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் காட்டவோ கூடாது.


குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்துக்குரிய நபரை காவல் நிலையத்திற்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ காவல் துறையினர் அழைத்துச் செல்லும் போது, ​​குற்றவாளியின் முகம் மறைக்கப்படுவதை நாம் பலமுறை பார்க்கிறோம். குற்றவியல் தண்டனைச் சட்டம் பிரிவு 303 மற்றும் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 22(1)ன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அனைத்து நபர்களுக்கும், அவர்கள் விரும்பும் ஒரு வழக்கறிஞரால் பாதுகாக்கப்படுவதற்கான உரிமையை வழங்குகிறது.


குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றம் செய்த நபரின் குடும்பங்கள் குறிவைக்கப்படாமல் இருப்பதற்காக, குற்றவாளிகளின் முகங்கள் மறைக்கப்படுகின்றன. மேலும் சட்டத்தின் படி, அந்த நபர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே, அவர் குற்றவாளியாகக் கருதப்படுவார், அதற்கு முன் அவர் குற்றம் சாட்டப்பட்டவர் என்று அழைக்கப்படுவார். எனவே, குற்றவாளிகள் ஊடகங்களில் வெளிப்படும் போது, ​​அவர்களின் முகங்கள் வெளிப்படுவதில்லை, அதனால் அவர்கள் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவிக்கும் வரை அவர்களின் மனித உரிமைகள் அப்படியே இருக்கும்.