லேசான அறிகுறியற்ற கொரோனா பாதிப்பு: வீட்டு தனிமைப்படுத்தலுக்கான புதிய வழிகாட்டுதல்கள்

 Covid-19 Home Isolation Revised Guidelines: லேசான அறிகுறிகள் இல்லாத கொவிட்-19 பாதிப்புள்ள நபர் என்று சிகிச்சையளிக்கும் மருத்துவ அதிகாரி சான்றளிக்க வேண்டும்.

Continues below advertisement

 Covid-19 Home Isolation Revised Guidelines: லேசான அறிகுறிகள் இல்லாத கோவிட்-19 பாதிப்புள்ள நபர்களின் வீட்டு தனிமைப்படுத்தலுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது.  முன்னதாக, கடந்தாண்டு ஜூலை மாதம், லேசான அறிகுறியற்ற  நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. 

Continues below advertisement

திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு தகுதியுடைய நோயாளிகள் யார்? நோயாளிக்கான விதிமுறைகள் என்ன?  பராமரிப்பு அளிப்பவர்களுக்கான விதிமுறைகள் என்ன?  உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விளக்கப்பட்டுள்ளன. 

மேலும், கோவிட்-19 தொற்றுநோயைப் பரப்புவதைத் தடுப்பதற்காக கள அளவில் வீட்டு தனிமைப்படுத்துதலுக்கான வழிகாட்டுதல்களை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யுமாறு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மாநிலங்களை கோரியுள்ளது.    

வீட்டு தனிமைப்படுத்தலுக்கு தகுதியுடைய நோயாளிகள்

 லேசான/அறிகுறிகள் இல்லாத கொவிட்-19 பாதிப்புள்ள நபர் என்று சிகிச்சையளிக்கும் மருத்துவ அதிகாரி சான்றளிக்க வேண்டும்.

நோயாளியை தனிமைப்படுத்துவதற்கும், குடும்ப உறுப்பினர்களை தனிமைப்படுத்துவதற்கும் போதுமான வசதிகள் வீட்டில் இருக்க வேண்டும்.

அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் நோயாளியை பார்த்துக்கொள்ள பராமரிப்பாளர் இருக்க வேண்டும். ஒட்டுமொத்த தனிமைப்படுத்தல் காலத்திலும் பராமரிப்பாளர் மற்றும் மருத்துவமனை இடையே தொடர்பு இருக்க வேண்டும்.

 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், இணை நோய்த்தன்மை உடையவர்களும் மருத்துவ அதிகாரியால் முறையாக மதிப்பிடப்பட்ட பிறகே வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

எச் ஐ வி தொற்றுடையோர், உறுப்பு மாற்று சிகிச்சை செய்து கொண்டவர்கள், புற்று நோய் சிகிச்சை பெறுவோர் ஆகியோரும் மருத்துவ அதிகாரியால் முறையாக மதிப்பிடப்பட்ட பிறகே வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுமதிக்கப்பட வேண்டும். இவர்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தல் பரிந்துரைக்கப்படவில்லை.

பராமரிப்பாளரும், பாதிப்புள்ளவரின் அனைத்து நெருங்கிய தொடர்புகளும் ஹைட்ரோகுளோரோகுயின் புரோபிலாக்சிஸை மருத்துவ அதிகாரியின் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.

 கூடுதலாக, https://www.mohfw.gov.in/pdf/Guidelinesforhomequarantine.pdf எனும் இணைய முகவரியில் உள்ள வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும்.

 

நோயாளிக்கான விதிமுறைகள்

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து, குறிப்பாக வயது முதிர்ந்தோர் மற்றும் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், சிறு நீரக நோய் போன்ற இணை நோய்கள் உள்ளவர்களிடம் இருந்து நோயாளி தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், தனி அறையில் தங்க வேண்டும்.

நல்ல காற்றோட்டமுள்ள அறையில் நோயாளி தங்க வைக்கப்பட வேண்டும்.

 மூன்றடுக்கு முகக்கவசத்தை எப்போதும் அணிய வேண்டும். 8 மணி நேர பயன்பாட்டுக்குப் பின்னரோ அல்லது முகக்கவசம் அழுக்கானாலோ, 1 சதவீத சோடியம் ஹைப்போகுளோரைட்டின் மூலம் கிருமிநாசம் செய்த பின்னர் அதை அப்புறப்படுத்தவும்.

நோயாளிகள் நன்றாக ஓய்வெடுத்து, உடலில் நீர் சத்தை பராமரிக்க நிறைய திரவங்களைக் பருக வேண்டும்.

 சுவாச ஒழுங்குமுறைகளை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும்.

குறைந்தது 40 நொடிகளுக்கு சோப் மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், அல்லது ஆல்கஹால் சார்ந்த கிருமி நாசினியைப் பயன்படுத்தி சுத்தப்படுத்த வேண்டும்.

சொந்த உபயோகப் பொருள்களை அடுத்தவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.

 

 

 

அறையில் உள்ள அடிக்கடித் தொடக்கூடிய இடங்களை (மேஜையின் மேற்புறங்கள், கதவுக் குமிழ், கைப்பிடிகள் இன்னும் பல) ஒரு சதவீதம் ஹைப்போக்குளோரைட் திரவத்தால் சுத்தப்படுத்தவும்.

ஆக்சிமீட்டர் மூலம் ரத்த ஆக்சிஜன் அளவை சுயப்பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.

தங்களுடைய தினசரி உடல் வெப்பத்தை சோதிப்பதன் மூலம், நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்தை தாங்களே கண்காணித்து, அறிகுறி ஏதாவது மோசமாக இருந்தால் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும்.

 

மருத்துவமனை சிகிச்சை எப்போது தேவைப்படுகிறது? 

1. மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்படும் போது

2. ரத்தித்தில் ஆக்ஸிஜன் அளவு குறையும் போது (எஸ்பிஓ2< 94%)

3. தொடர்ச்சியாக மார்பு வலி இருந்தால் 

4.  குழப்பமான மனநிலை அல்லது செயலற்று இருந்தால் 

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டன.      

 

Continues below advertisement
Sponsored Links by Taboola