காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

Morning Breaking News : கடந்த 24 மணி நேரத்தில் 107 பேர், தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றினால்  உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், மாநிலத்தின் மொத்த இறப்பு எண்ணிக்கை 13,933 ஆக அதிகரித்துள்ளது. 

Continues below advertisement

தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய அரசியல் சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.   

Continues below advertisement

1. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,542 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. இதில்,  அதிகபட்சமாக சென்னையில் 5,445 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது.         

2. கடந்த 24 மணி நேரத்தில் 107 பேர், தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றினால்  உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், மாநிலத்தின் மொத்த இறப்பு எண்ணிக்கை 13,933 ஆக அதிகரித்துள்ளது.    

3. மாநிலங்களுக்கு வழங்கும் கோவாக்சின் தடுப்பூசியின் விலையை 400 ரூபாயாக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்துள்ளது.  முன்னதாக, பாரத் பயோடெக் நிறுவனம் மாநிலங்களுக்கு ஒரு டோஸ் 600 ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தது. 

 

4.  கொரோனா நோய்த் தொற்றால்  பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் நேற்று குணமடைந்து வீடுதிரும்பினார். 

5. தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறுஅறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. எனவே, தற்போதுள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

 

6. நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா அணிக்கு எதிராக ஆட்டத்தில் டெல்லி  அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

7. நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. 

8. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது 98. 6 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் உடல் வெப்ப நிலை இருந்தால் வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதி கிடையாது என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

9. கடந்த 24 மணி நேரத்தில் 3,79,257 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தற்போது 30,84,814 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.கடந்த 24 மணி நேரத்தில் 21 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. 

10. ராணுவ தளபதி எம்எம் நரவானே பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினார். கோவிட் மேலாண்மை நடவடிக்கையில் உதவ, ராணுவம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் குறித்து அவர்கள் ஆலோசித்தனர். நாட்டின் பல பகுதிகளில், தற்காலிக மருத்துவமனைகளை ராணுவம் அமைத்துள்ளதாகவும், பல மாநிலங்களுக்கு, ராணுவ மருத்துவ குழுவினர் சேவை அளித்து வருவதாகவும்  ஜெனரல் எம்எம் நரவானே பிரதமரிடம் தெரிவித்தார்

Continues below advertisement