Tax Devolution: ஒரு நிதியாண்டில் மத்திய அரசு வசூலிக்கும் வரியில் 41 சதவீதம், மாநில அரசுகளுக்கு 14 தவணைகளாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

நவம்பர் மாதத்திற்கான வரிப்பங்கீடு:

​​ஒவோரு நிதியாண்டிலும் மத்திய அரசு வசூலிக்கும் மொத்த வரியில் 41 சதவீதம், மாநிலங்களுக்கு 14 தவணைகளாக பகிர்ந்தளிக்கப்படுகிறது. அந்த வகையில் நவம்பர் மாதத்திற்கான வரிப்பங்கீடாக 72 ஆயிரத்து 961 கோடியே 21 லட்ச ரூபாயை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. வழக்கமாக மாதத்தின் 10வது நாளில் வழங்கப்படும் இந்த வரிப்பங்கீடு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் 7ம் தேதியே விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பண்டிகை கால கொண்டாட்டத்தை ஊக்குவிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

மாநில வாரியான நிதிப்பங்கீடு:

வரிசை

மாநிலம்

ஒதுக்கப்பட்ட நிதி (கோடி)

1

ஆந்திரா

2952.74

2

அருணாச்சலபிரதேசம்

1281.93

3

அசாம்

2282.24

4

பீகார்

7338.44

5

சத்தீஸ்கர்

2485.79

6

கோவா

281.63

7

குஜராத்

2537.59

8

ஹரியானா

797.47

9

இமாச்சலபிரதேசம்

605.57

10

ஜார்கண்ட்

2412.83

11

கர்நாடகா

2660.88

12

கேரளா

1404.50

13

மத்தியபிரதேசம்

5727.44

14

மகாராஷ்டிரா

4608.96

15

மணிப்பூர்

522.41

16

மேகாலயா

559.61

17

மிசோரம்

364.80

18

நாகாலாந்து

415.15

19

ஒடிஷா

3303.69

20

பஞ்சாப்

1318.40

21

ராஜஸ்தான்

4396.64

22

சிக்கிம்

283.10

23

தமிழ்நாடு

2976.10

24

தெலங்கானா

1533.64

25

திரிபுரா

516.56

26

உத்தரபிரதேசம்

13088.51

27

உத்தரகாண்ட்

815.71

28

மேற்குவங்கம்

5488.88

 

மொத்தம்

72961.21

தமிழ்நாட்டிற்கு ரூ.2,976 கோடி:

இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு 13 ஆயிரத்து 88 கோடி ரூபாயும், பீகாருக்கு 7 ஆயிரத்து 338 கோடி ரூபாயும், மத்தியபிரதேசத்திற்கு  5 ஆயிரத்து 727 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு 2 ஆயிரத்து 976 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய் வரியாக செலுத்தினால் அதில் 29 காசுகள் மட்டுமே மத்திய அரசு நிதிப்பங்கீடான வழங்குகிறது. அதேநேரம், உத்தரபிரதேசம் அரசு செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும், 2.73 ரூபாய் திரும்ப வழங்கப்படுகிறது என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூற்யிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் ஜிஎஸ்டி வசூல்:

அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ.1.72 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. முன் எப்போதும் இல்லாத இரண்டாவது அதிகபட்ச ஜிஎஸ்டி வசூல் இதுவாகும்.  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வசூலானை 1.52 லட்சம் கோடி ரூபாயை விட 13 சதவிகிதம் அதிகமாகும். 23-24 நிதியாண்டில் சராசரி மொத்த மாத ஜிஎஸ்டி வசூல் இப்போது ரூ.1.66 லட்சம் கோடியாக உள்ளது. அக்டோபர் 2023 இல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,72,003 கோடி ஆகும்.  இதில் ரூ. 30,062 கோடி மத்திய ஜிஎஸ்டி, ரூ. 38,171 கோடி மாநில ஜிஎஸ்டி, ரூ. 91,315 கோடி ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மற்றும் ரூ.12,456 கோடி செஸ் வரியாகும்.

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் இருந்து மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.42,873 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.36,614 கோடியும் அரசு வழங்கியுள்ளது. வழக்கமான தீர்வுக்குப் பிறகு அக்டோபர் மாதத்தில் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.72,934 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.74,785 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.