தமிழ்நாடு:
- அதிமுக கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- 100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் பாஜக அரசை கண்டித்து நவம்பர் 15 ஆம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 60 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு
- ராமநாதபுரம் மற்றும் அரியலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டம் - தமிழ்நாடு அரசு அனுமதிக்கக்கூடாது என வைகோ, திருமாவளவன் வலியுறுத்தல்ம்
- இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு - ராமேஸ்வரத்தில் இரண்டாவது நாளாக போராட்டம்
- கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10% போனஸ் அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை - நெல்லை இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு
- கல்வியும் மருத்துவமும் திராவிட ஆட்சியின் இரண்டு கண்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 7,200 பட்டாசு கடைகளுக்கு அனுமதி - தீயணைப்புத்துறை தகவல்
- தமிழக மக்களின் நலனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
- தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.490 வழங்கப்படும் என மாநில அரசு அறிவிப்பு
இந்தியா:
- பாஜகவின் நட்சத்திர பேச்சாளராக அமலாக்கத்துறை உள்ளது - மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு
- மிசோரம், சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலில் 70 சதவீதத்திற்கும் மேல் வாக்குப்பதிவு
- பீகாரில் இட ஒதுக்கீட்டை 65 சதவிகிதமாக உயர்த்த திட்டம் - மத்திய அரசிடம் முதலமைச்சர் நிதிஷ்குமார் கோரிக்கை
- நாட்டின் சொத்துக்களை பாஜக தனியாருக்கு கொடுப்பதாக பிரியங்கா காந்தி தாக்கு
- ராஷ்மிகா மந்தனா போலி வீடியோ - குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை
உலகம்:
- ஊழல் குற்றச்சாட்டு காரணமாக போர்ச்சுகல் நாட்டின் பிரதமர் அண்டனியோ காஷ்டா பதவியை ராஜினாமா செய்தார்
- ஆப்கானிஸ்தான் நாட்டில் மினி பஸ்ஸில் குண்டுவெடித்து 7 பேர் உயிரிழப்பு
- கென்யா, சோமாலியாவில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு - 40 பேர் பலியானதாக தகவல்
- காசா நகரின் மையப்பகுதியில் ராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தகவல்
விளையாட்டு:
- உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகள் மோதல்
- உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசிய மேக்ஸ்வெல் - 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
- சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி - உலகத்தரவரிசை பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேற்றம்
- உலகக்கோப்பை தொடரில் இருந்து வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் காயம் காரணமாக விலகல்