நாடு முழுவதும் இதுவரை 20,000 தெருவில் வசிக்கும் பிள்ளைகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருவதாக என்.சி.பி.சி.ஆர். தலைவர் பிரியங்க் கானூங்கோ தெரிவித்துள்ளார். இந்தியாவில் தெருவோரம் வசிக்கும் குழந்தைகளின் நிலை குறித்து பிடிஐயிடம் பேசிய அவர், அரசின் ’பால் ஸ்வராஜ்’ என்ற வலைதளம் தெருவோரக் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது, அங்கு அவர்களின் தகவல்களைப் பதிவேற்றலாம் மற்றும் அவர்களைக் கண்காணிக்கலாம், மேலும் அவர்களின் மறுவாழ்வுக்கான பணிகளைச் செய்யலாம் என்று அவர் கூறினார்.
இதுவரை 20,000 சாலையோரம் வசிக்கும் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டிருப்பதாக அவர் தனது செய்தி அறிக்கையில் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், அத்தகைய குழந்தைகளைக் கண்டறிந்து மறுவாழ்வு தருவதில் மாநிலங்கள் திறம்பட செயல்படவில்லை என்றும் மூத்த அதிகாரியான ப்ரியங்க் கூறியுள்ளார்.
குறிப்பாக புதுடெல்லியில் உள்ள அரசின் செயலற்ற தன்மையால், 1,800 குழந்தைகள் மட்டுமே இந்த செயல்முறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 73,000 குழந்தைகள் டெல்லி தெருக்களில் வசிப்பதாக தங்களிடம் கூறப்பட்டது என்றும் கனூங்கோ கூறியுள்ளார்.
"தெருவில் வசிக்கும் குழந்தைகளில், நாங்கள் அடிப்படையில் மூன்று வகையான குழந்தைகளைக் கண்டோம் - முதலில் தங்கள் வீடுகளை விட்டு ஓடிப்போன அல்லது கைவிடப்பட்ட மற்றும் தெருக்களில் தனியாக வாழ்பவர்கள்; இரண்டாவது குடும்பத்துடன் தெருக்களில் தங்கியிருப்பவர்கள் மற்றும் அவர்களின் முழு குடும்பமும் தெருவை ஆக்கிரமித்திருப்பார்கள்; மூன்றாவது பிரிவினர் அருகிலுள்ள முன்னேற்றப்பட்டாத நகர்புறப் பகுதிகள் வசிப்பவர்கள், அதனால் அவர்கள் பகலில் தெருக்களில் இருப்பார்கள், இரவில் அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்கிறார்கள்," என்று அவர் கூறினார்.
இந்த மூன்று பிரிவுக்கும் தற்போது தாங்கள் மீட்டு மறுவாழ்வு அளித்து வருவதாக ப்ரியங்க் கூறினார்.
முன்னதாக, இந்தியாவில், கடந்த ஆண்டு இறுதியில் கொலைகள் நடந்த எண்ணிக்கை குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) ஆய்வு செய்வது வழக்கமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான குற்றாய்வு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாட்டில் 2016 ஆண்டு முதல் 2021 வரை அதிக குற்ற சம்பவங்கள் நடைபெற்ற இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதிலும் குற்றங்களில் சிறார்கள் செய்த குற்ற எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே சென்றுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு, 48 கொலைக் குற்றங்களில் சிறார்கள் குற்றம் சாட்டப்பட்டு இருந்தனர். பிறகு 2017 ஆம் ஆண்டு 53 கொலைக் குற்றங்களும், 2018 ஆம் ஆண்டு அது 75 ஆகவும், 2019 ஆம் ஆண்டு அது 92 ஆகவும் , 2020 ஆம் ஆண்டு 104 குற்றங்களும் நடந்துள்ளது.
2016 ஆம் ஆண்டு 3 சதவீதம் மட்டுமே சிறார்கள் குற்றவாளிகளாக இருந்தனர். அது படிப்படியாக உயர்ந்து 2020 ஆம் ஆண்டில் 6.3 சதவீதம் உயர்ந்து உள்ளது. அதாவது 2017 ஆம் ஆண்டில் 3.4 சதவீகிதமாகவும், 2018 ஆம் ஆண்டில் 4.8 சதவீகிதமாகவும், 2019 ஆம் ஆண்டில் 5.3 சதவீகிதம், 2021 ஆம் ஆண்டில் 6.1 சதவீகிதமாக அதிகரித்துள்ளது.
2016 ஆம் ஆண்டிலிருந்து, 2020 ஆம் ஆண்டு வரை குறைந்திருந்தது. 2016-ம் ஆண்டில் 30,450 கொலை வழக்குகளில் 2.9 சதவீகித சிறார்கள் குற்றம் சாட்டப்பட்டு இருந்தனர்.
இடைப்பட்ட 2017 ஆம் ஆண்டில் 28 ஆயிரத்து 653 கொலைகளில் 2.5 சதவீகிதம், எனக் குறைந்தது. 2018 ஆம் ஆண்டில் 29, 17 கொலைகளில் 2.6 சதவீகித சிறார்களும், 2019 ஆம் ஆண்டில் 28,918 கொலைகளில் 2.9 சதவீகிதம், 2020 a ஆண்டில் 29,193 கொலைகளில் 2.6 சதவீகித சிறார்களும் குற்றம் சாட்டப்பட்டனர்.
பின்னர் சற்று அதிகரித்துள்ளது. அதாவது 2016-ம் ஆண்டில் 30,450 கொலை வழக்குகளில் 2.9% சிறார்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.