உதகை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கீதா. இவரது மூன்றாவது கணவர் கார்த்திக். இந்தத் தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கீதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரையும், தனது பகுதியில் ஒருவரையும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. 5வது காதலால் மனைவியின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த கார்த்திக்,  தனது 3 வயது ஆண்மகனை அழைத்துக்கொண்டு கோவைக்கு சென்றுவிட்டார். 


போலீசாருக்கு தகவல்


இதனையடுத்து 1 வயது ஆண் குழந்தை கீதாவிடம் வளர்ந்து வந்த நிலையில், கடந்த 14 ஆம் தேதி அந்த ஆண்குழந்தை மயங்கி விழுந்து விட்டதாக கூறி, குழந்தையை உதகை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார் கீதா. குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை முன்னதாகவே இறந்துவிட்டதாக கூறியதோடு, குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 


இதனையடுத்து வழக்குபதிவு செய்த விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு கீதாவின் நடவடிக்கையில் சந்தேகம் வரத்தொடங்கியது. இதனையடுத்து கீதாவை பிடித்து விசாரணை செய்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.


போலீசார் விசாரணை


போலீசார் நடத்திய விசாரணையில், “ கீதாவுக்கு ஏற்கனவே  2 பேருடன் திருமணம் முடிந்த நிலையில், அதில் ஒருவருடன் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்ததும், மூன்றாவதாக கார்த்திக்கை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. மேலும் கார்த்திக்குடன் வசித்து வந்த கீதாவிற்கு மேலும் சிலருடன் காதல் மலர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.


இதனால் குழந்தையை சரிவர பராமரிக்காமல் பலமுறை பட்டினி போட்டதாக கூறப்படும் நிலையில், காதல் வாழ்கையை தொடர ஒரு கட்டத்தில் குழந்தையை கொல்ல முடிவெடுத்த கீதா, குழந்தைக்கு மதுவை கொடுத்துள்ளார். இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, குழந்தையை தொட்டிலில் போட்டு சுவற்றில் மோதவிட்டுள்ளார். இந்த விவரங்கள் முழுவதும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததாக போலீசார் கூறியுள்ளனர். தொடர்ந்து கீதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 




மேலும் படிக்க: சிறுமியை வன்கொடுமை செய்த தாத்தா மற்றும் 3 மகன்கள் - முன் ஜாமீன் கோரிய வழக்கில் எஸ்பி பதில் தர உத்தரவு




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண